பதுளை - மஹியங்கனை வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

பாரவூர்தி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.