(இராஜதுரை ஹஷான்)
நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு இதுவரையில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பு கூற வேண்டும். நெருக்கடி நிலைமையை சீர்செய்யவும்,மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடந்து மக்கள் மத்தியில் வந்துள்ளோம்.
இனி வரும் காலங்களில் தனி நபரையும், கட்சியையும் வெற்றிபெற செய்வதற்கு துணைபோக போவதில்லை. நாட்டை வெற்றிபெற செய்ய ஒன்றிணைந்து செயற்படுவோம் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
முழு நாட்டையும் சரியான பாதைக்கு என்ற தொனிப்பொருளின் கீழ் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்து இன்று கொழும்பில் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேசியத்தின் தீர்மானமிக்க தருணத்தில் உள்ளோம்.சுதந்திர இலங்கை விடுதலை புலிகள் அமைப்பு காலத்தை காட்டிலும் தற்போது பாரதூரமான பிரச்சினைகளை எதிர்க்கொண்டுள்ளது என்பதை எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்கள் கூட்டத்தையும்,மின்விநியோக தடையையும்,அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தையும் கண்டு விளங்கிக்கொள்ள முடியும்.
நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளது என்பதை முதலில் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.உண்மையை ஏற்றுக்கொண்டால் தான் சவால்களை ஒருமித்து வெற்றிக்கொள்ள முடியும்.நாடு பாரிய வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடியை எதிர்நோக்கும் வகையில் உள்ளது என்பதை கடந்த வருடம் ஜுன் மாதமளவில் அறிவித்தேன்.
எனது கருத்து விமர்சிக்கப்பட்டதே தவிர குறிப்பிட்ட விடயத்தின் பாரதூரத்தன்மை ஆராயப்படவில்லை.எனக்கு எதிராக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அறிக்கையை மாத்திரம் வெளியிட்டார்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது எவ்வாறு என்பது குறித்து பலமுறை பங்காளி கட்சிகளுக்கிடையில் ஆராய்ந்துள்ளோம்.
அரசாங்கத்திடம் இவ்விடயம் குறித்து குறிப்பிட்டு தோல்வியடைந்தால் மக்கள் மத்தியில் உண்மையை உரைக்க வேண்டியுள்ளது. வழமையான கொள்கைகயை மாற்றியமைத்து செயற்படுத்த வேண்டியதை செயற்படுத்தவே முயற்சிக்கிறோம்.
நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு இதுவரையில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பு கூற வேண்டும்.
நாட்டை முன்னேற்றும் நோக்கத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும். தனிநபரையும்,கட்சியையும் வெற்றிபெற செய்யும் செயற்பாடுகளில் இனி ஒன்றிணைய போவதில்லை.நாட்டை வெற்றிபெற செய்யும் நோக்கில் ஒன்றிணைவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM