(எம்.மனோசித்ரா)
சர்வகட்சி சம்மேளனமொன்றை ஸ்தாபித்து நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்திய விடயங்களை , நடைமுறையில் செயற்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைககள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திர கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள அனைத்து தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பு என்பவை தொடர்பிலும் மத்திய குழு கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கையில் ,
கட்சியின் மத்திய குழு தீர்மானிக்குமாயின் அரசாங்கத்திலிருந்து விலக வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதனை செய்வதற்கும் தயாராகவே இருக்கின்றோம். மத்திய குழு எந்த தீர்மானத்தை எடுத்தால் அதற்கமையவே செயற்படுவோம். அந்த நிலைப்பாட்டில் ஸ்திரமாகவுள்ளோம்.
பொது மக்கள் எதிர்கொண்டுள்ள எரிபொருள் நெருக்கடி எமக்கும் ஏற்பட்டுள்ளது. மத்திய குழு கூட்டம் நிறைவடைந்து செல்லும் போது சு.க. பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டாரவினுடைய வாகனத்தில் எரிபொருள் இல்லை. என்ன செய்வதென்று நாமும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.
தற்போதைய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பொருளாதார ரீதியான சில தீர்மானங்கள் இதில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளில் தாக்கம் செலுத்துகின்றன. அதே போன்று நாளாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் மின் துண்டிப்பினால் சாதாரண மக்களைப் போன்றே நாமும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வகட்சி சம்மேளனமொன்றை ஸ்தாபித்து , அனைத்து கட்சிகளுடனும் இணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
எனினும் அது தொடர்பில் மத்திய குழுவில் கலந்துரையாடப்படவில்லை. எதிர்வரும் காலங்களில் கட்சியின் சம்மேளனங்களையும் ஏற்பாடு செய்வதற்கும் , கட்சியை மேலும் மேம்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் யாவை? , எதிர்கால திட்டமிடல் குறித்து 5 ஆம் திகதி சகல அமைப்பாளர்களையும் அழைத்து முன்னெடுக்கப்படவுள்ள கலந்துரையாடல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது என்றார்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM