(எம்.மனோசித்ரா)
நாட்டில் பெருமளவான மக்கள் மூட நம்பிக்கைகளிலிருந்து விலகி மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காண்பிக்கின்றமை மகிழ்ச்சியளிப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
உற்சவ காலங்களில் கொவிட் தொற்று பரவக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் என்பதால் அதற்கு இடமளிக்காமல் , வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுமாறு பொது மக்களை கேட்டுக் கொள்கின்றோம்.
இதுவரையில் 70 இலட்சத்திற்கும் அதிகமானோர் மூன்றாம் கட்ட தடுப்பூசியையும், 140 இலட்சத்திற்கும் அதிகமானோர் இரண்டாம் கட்ட தடுப்பூசியையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
கடந்த ஓரிரு வாரங்களாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் 1200 என்ற அடிப்படையில் பதிவாகியது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் தமது மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காண்பிக்கின்றனர்.
தடுப்பூசி பெற்றிருப்பதை எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதியுடன் கட்டாயமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பின்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM