நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுபாடு காரணமாக எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நிற்கும் மக்களிடையே ஏற்படக்கூடிய கலவரத்தை தடுக்கும் வகையில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் உபகரணங்களுக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வோருக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாது எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கும் மற்றும் தீயணைப்பு வாகனம், அம்புலன்ஸ் போன்ற அத்தியாவசிய சேவை வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு முன்னுரிமை அளிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருளை பெறுவதற்காக வாகனங்களை தரிப்பதில் ஏற்படும் கலவரங்களை தடுக்கும் வகையிலும் குறிப்பிட்ட பொலிஸ் பிரிவுகளுக்குள் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொலிஸார் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.