(இராஜதுரை ஹஷான்)
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டத்தை விரைவுப்படுத்துவதற்காக நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தலைமையில் 5 அமைச்சர்களை உள்ளடக்கிய அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.
2030ஆம் ஆண்டளவில் நாட்டில் 70சதவீத மின்சாரத்தை புதுப்பிக்கத்த வலுசக்தி மூலங்களிலிருந்து உற்பத்தி செய்ய வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கையை அடைவதற்கும்,புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் திட்டங்களைத் துரிதப்படுத்துவதற்காகவும் 5 அமைச்சரவை அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை உபகுழுவை நியமிக்க ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, நீர்வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார,வலுசக்தி அமைச்சர் உதயகம்மன்பில, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ,நீதியமைச்சர் அலி சப்ரி ஆகியோர் அமைச்சரவை உபகுழுவின் உறுப்பினர்களாவர்.இக்குழுவின் தலைவராக நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அடையாளங் காணப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களை செயற்படுத்துவதற்கு ஆர்வமுள்ள முதலீட்டாளர்களில் தகுதியானவர்களை தெரிவு செய்தல்,உயர்ந்த வினைத்திறனான திட்டங்களை அடையாளங் காணல்,திட்டங்களை செயற்படுத்துவதற்காக அமுலிலுள்ள சட்டங்கள் மற்றும் தடைகளை அடையாளங் கண்டு தடைகளை நீக்கல்,புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களினூடாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்புடன் இணைப்பதற்கான வசதிகளை மேம்படுத்தல் குறித்த அமைச்சரவை உபகுழு கவனம் செலுத்தும்.
இக்குழுவின் நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM