குழந்தையை பிரசவித்த பெண்கள் மீண்டும் பாடசாலைக்கு செல்ல ஊக்குவிக்கும் புதிய கொள்கையை உகண்டா நடைமுறைப்படுத்தியுள்ளது.
பொது முடக்கத்தினால் ஏற்பட்ட பல பிரச்சினைகளில் ஒன்று 'இளம் வயது கர்ப்பம்' அதிகரித்தமையாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் கணக்கெடுப்பின்படி, உகண்டாவில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 290,219 இளம் வயது கர்ப்பங்கள் பதிவாகியுள்ளன.
2020, 2019 ஆண்டு முறையே 354,000 ,358,000 இளம் வயது கர்ப்பங்கள் பதிவாகியுள்ளன.
குழந்தைகள் பிறந்த பின்னர் பெண்கள் பாடசாலையில் சேர்க்கப்பட வேண்டும் என்றும், இதற்கு மறுக்கும் பாடசாலை அதிபர்கள் குறித்து பெற்றோர்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், சில உகண்டா மதத் தலைவர்கள் இந்த மாற்றத்தை எதிர்த்துள்ளனர்.
மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு அறிக்கையில்,
2019 ஆம் ஆண்டு முதல் கர்ப்பிணிப் பாடசாலைச் சிறுமிகள் மற்றும் இளம் பருவ தாய்மார்களின் கல்வி உரிமைகளைப் பாதுகாக்கும் கொள்கைகளை நிறுவிய ஐந்து துணை-சஹாரா ஆப்பிரிக்க நாடுகளில் உகண்டாவும் ஒன்று எனப் பாராட்டியுள்ளது.
மேலும், குறித்த கொள்கை முப்பது ஆபிரிக்க நாடுகளில் தற்போது நடைமுறையில் உள்ளதாகவும், இன்னும் சில நாடுகள் இளம் தாய்மார்களையும் கர்ப்பிணிப் பெண்களையும் கல்வி கற்க தடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.
தன்சானியாவில், முன்னாள் ஜனாதிபதி கர்ப்பிணிப் பெண்களை பாடசாலையில் சேர்க்க தடை விதித்தார், பின்னர் நவம்பர் மாதம் அந்த கொள்கையை மாற்றியமைத்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM