வாகன விபத்துக்களில் சிறுவன் உட்பட 7 பேர் பலி

02 Mar, 2022 | 04:52 PM
image

நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்கிழமை (1) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 16 வயது சிறுவன் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

திருகோணமலை :

திருகோணமலை -  உமர்மலை  பகுதியிலிருந்து கந்தளாய் நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிள் அதன் வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் பாதை விட்டு விலகிவிபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதன் போது குறித்த மோட்டார்சைக்களில் 3 பேர் பயணித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

காயமடைந்த மூவரும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இதன் போது மோட்டார்சைக்கிள் செலுத்திய குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும்  மற்றைய இருவரும் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 16 வயதுடைய திருகோணமலை - சுமெதகம பிரதேசத்தை சேர்ந்தவராவார். 

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மாவனெல்லை :

மாவனெல்லை கொழும்பு - கண்டி பிரதான வீதியின் ஹம்புன்கடுவ சந்திக்கருகில் மோட்டார்சைக்கிள் ஒன்று எதிர்திசையில் வந்த ஜீப் வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 

இதன் போது மோட்டார்சைக்கிள் செலுத்திய நபரும் மற்றவரும் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மோட்டார்சைக்கிள் செலுத்தியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 21 வயதுடைய சியம்பலாபிடிய, மாவனெல்ல பகுதியை சேர்ந்தவராவார். 

சம்பவம் தொடர்பில் ஜீப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மாவனெல்ல பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உடவலவ :

உடவலவ  இரத்தினபுரி- எம்பிலிபிடிய பிரதான வீதியின் கொலம்பகேஹார பிரதேசத்தில் இரத்தினபுரியிலிருந்து எம்பிலிபிட்டிய நோக்கி பயணித்த கார் வேக  கட்டுப்பாட்டை இழந்து  வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது காயமடைந்த காரின் சாரதி மற்றும் அதில் பயணித்த மூவரும் எம்பிலிபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இதன் போது கார் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 27 வயதுடையவர். 

சம்பவம் தொடர்பில் உடவலவ பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மோனராகலை :

மொனராகலை , மொனராகலை - பொத்துவில் பிரதான வீதி சிரிகல பிரதேசத்தில் பொதுவிலிருந்து மொனராகலை நோக்கி பயணித்த லொறி ஒன்று எதிர் திசையில் வந்த காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது லொறி சாரதி, உதவியலாளர் மற்றும் காரின் சாரதி உட்பட மூவரும் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பலத்த காயமடைந்த உதவியலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 23 வயதுடைய வெலிகம பிரதேசத்தை சேர்ந்தவராவார். 

சம்பவம் தொடர்பில் மொனராகலை பொலிசார் மேலதிக விசாரணைகளைமுன்னெடுத்துள்ளனர்.

மொரகாஹேனை :

மொரகாஹேனை  பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய ரக லொறி மீது மற்றுமொரு லொறி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 

இதன் போது காயமடைந்த நிறுத்தப்பட்டிருந்த லொறியின் சாரதி ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 44 வயதுடைய கனன்வில - ஹொரண பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் சம்பவம் தொடர்பில் விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மொரகஹெனை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஹொரவ்பொதானை :

ஹொரவ்பொதானை , திருகோணமலை - ஹொரோவ்பொதனை பிரதான வீதியின் அலுத்வத்தை, மரதன்கடவல பிரதேசத்தில் டிபர் வாகனம் எதிர்திசையில் வந்த காருடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது பலத்த காயமடைந்த கார் சாரதி ஹொரவ்பொதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 50 வயதுடைய கத்தோலிக்க பாதிரியார் எனவும் சம்பவம் தொடர்பில் குறித்த டிபர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மதுகம :

மதுகம , மதுகம- களுத்தறை பிரதான வீதியின் பொல்வத்த பிரதேசத்தில் முச்சக்கரவண்டி பாதசாரி மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது காயமடைந்த பாதசாரி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 84 வயதுடைய மதுகமை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க சென்னை...

2026-05-16 17:20:15
news-image

உலகின் மிக நீண்ட தொடு உணர்...

2026-05-16 16:42:22
news-image

UPDATE ; வனவாசல ரயில் விபத்து...

2026-05-16 16:13:27
news-image

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டம்...

2026-05-16 17:03:48
news-image

கடலில் காற்றின் வேகம், மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும்...

2026-05-16 16:33:52
news-image

முள்ளிவாய்க்கால் கண்ணீர் ஓயாது ; அந்த...

2026-05-16 15:09:07
news-image

களுத்துறையில் 600 போதை மாத்திரைகளுடன் ஒருவர்...

2026-05-16 14:52:18
news-image

ரம்பேவ பகுதியில் விநியோகிக்கப்பட்ட MOP உரத்தின்...

2026-05-16 14:58:43
news-image

மானிப்பாயில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு

2026-05-16 15:19:02
news-image

காலி கோட்டை அமைதிப் போராட்டம் :...

2026-05-16 14:48:58
news-image

வாகன இறக்குமதி வரி அதிகரிப்பு தற்காலிகமானது...

2026-05-16 14:43:20
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால்...

2026-05-16 13:42:23