நான்காயிரம் சொகுசு கார்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பலானது போர்த்துக்கல்லின் அஸோர்ஸ் தீவில் தீப்பிடித்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு மூழ்கியுள்ளது.
பெலிசிட்டி ஏஸ் என்று பெயரிடப்பட்ட இந்த கப்பல் போர்ஷஸ் மற்றும் பென்ட்லீஸ் போன்ற 4,000 கார்களை ஏற்றிச் சென்றது.
ஜேர்மனியின் எம்டன் துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவின் ரோட் தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது பெப்ரவரி 16 ஆம் திகதி குறித்த கப்பல் தீ விபத்துக்குள்ளாகியுள்ளது. பின்னர் கப்பலில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று (01) கப்பல் கடலில் மூழ்கியுள்ளது.
குறித்த கப்பலின் கப்டன் ஜோவோ மெண்டெஸ் கபேகாஸ், கப்பலில் இதுவரை எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால், கப்பல் அட்லாண்டிக் கடலின் அடிப்பகுதியில் சுமார் 3,500 மீட்டர் ஆழத்தில் இருக்கும் போது எரிபொருள் தொட்டிகள் சேதமடையக்கூடும் என்று அஞ்சுவதாக தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM