கொழும்பில் கால்பந்தாட்ட மைதானங்களை நிர்மாணிக்க நடவடிக்கை

02 Mar, 2022 | 12:42 PM
image

(‍எம்.எம்.சில்வெஸ்டர்)

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனங்களின் கூட்டமைப்பு  (பீபா) மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியவற்றின் ஒத்து‍ழைப்புக்களை பெற்று தெரிவு செய்யப்பட்ட 10 நகரங்களில் 10 கால்பந்தாட்ட மைதானங்களை நிர்மானிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் தெரிவிக்கிறது.

இவ்விடயம் குறித்து இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் கூறுகையில்,

"சுகததாச விளையாட்டரங்குக்கு சொந்தமான திறந்தவெளி மைதானத்தின் நிர்வாகத்தை இலங்‍கை கால்பந்தாட்டத சம்மேளனத்திற்கு ஒப்படைப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச  உடன்பட்டுள்ளார். 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பீபா தலைவர் கியானி , இலங்கை வந்திருந்த சந்தர்ப்பத்தின்போது பிரதமர்  உடன்பட்டிருந்தார். 

எவ்வாறாயினும், சுகததாச விளையாட்டரங்கின் திறந்தவெளி மைதானத்தின் நிர்வாகத்தின் பொறுப்பை ஏற்பதை விடவும் முழுமையான கால்பந்தாட்ட அரங்கொன்றை கொழும்பில் அல்லது கொழும்புக்கு அருகாமையில் நிர்மானிப்பதற்கு இலங்கை கால்பந்தாட்ட சம்ளேனம் கடினமான முயற்சிகளை எடுத்து வருகிறது. 

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனங்களின் கூட்டமைப்பு  (பீபா) மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியவற்றின் ஒத்து‍ழைப்புக்களை பெற்று தெரிவு செய்யப்பட்ட 10 நகரங்களில் 10 கால்பந்தாட்ட மைதானங்களை நிர்மானிப்பதற்கான முயற்சிகளையும் நாம் எடுத்து வருகிறோம்" என்றார்.

பெலியத்த டி.ஏ. ராஜபக்ச விளையாட்டு மைதானத்தை 33 வருட குத்தகைக்கு  இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச உடன்பட்டுள்ளதாகவும் ‍ அவர் மேலும் தெரிவித்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரெட் ஸ்டார் - நியூ யங்ஸ்...

2026-08-08 13:18:49
news-image

வடக்கும் தெற்கும் நான்காவது தடவையாக மோதும்...

2026-08-08 13:11:34
news-image

சுப்பர் லீக் சம்பியன்ஷிப்பில் நான்கு அணிகளுக்கு...

2026-08-08 10:00:06
news-image

கலம்போ கெப்ஸ் அணியை 6 விக்கெட்களால்...

2026-08-08 05:40:25
news-image

கலம்போ எவ்.சி. - றினோன் போட்டி...

2026-08-07 19:27:38
news-image

டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா...

2026-08-07 16:07:43
news-image

கண்டி றோயல்ஸை வெளியேற்றி இரண்டாவது தகுதிகாண்...

2026-08-06 02:19:43
news-image

எல்.பி.எல். இறுதிப் போட்டியில் ஜெவ்னா கிங்ஸ்

2026-08-05 22:17:51
news-image

ஜெவ்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor...

2026-08-05 17:51:06
news-image

பொதுநலவாய போட்டிகளில் தங்கம் வென்ற ரொமேஷ்...

2026-08-05 12:32:55
news-image

கடைசி மகளிர் ரி20இல் பாகிஸ்தானின் சுழற்சியில்...

2026-08-04 23:54:46
news-image

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியினர் இலங்கை...

2026-08-04 23:18:26