சப்ரகமுவ - தென் மாகாண அணிகள் மோதும் அரைஇறுதிப் போட்டி இன்று

02 Mar, 2022 | 10:58 AM
image

(நெவில் அன்தனி)


சுதந்திர கிண்ண கால்பந்தாட்டத்தில் இறுதிப் போட்டியில் வட மாகாணத்தை எதிர்த்தாடப்போகும் அணி எது என்பதைத் தீர்மாணிக்கும் 2ஆவது அரை இறுதியின் 2 ஆம் கட்டப் போட்டியில் சப்ரகமுவ மாகாணமும் தென் மாகாணமும் இரத்தினபுரி சீவலி மைதானத்தில் இன்று புதன்கிழமை 02 ஆம் திகதி பிற்பகல் விளையாடவுள்ளன.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் காலியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலாம் கட்ட அரை இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற சப்ரகமுவ மாகாண அணி ஒரு கோல் அனுகூலத்துடன் 2ஆம் கட்ட அரை இறுதிப் போட்டியை  நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளது.

எனினும் முதலாம் கட்டப் போட்டியில் வெற்றி பெற்ற சப்ரகமுவ அணிக்கு 2ஆம் கட்டப் போட்டி இலகுவாக அமையும் என கருத முடியாது.

ஏனெனில் அப் போட்டியில் தென் மாகாண அணியின் பின்களத்தில் ஏற்பட்ட ஒரே ஒரு தவறினாலேயே சப்ரகமுவ மாகாண அணி வீரர் முஷ்பிக் கோல் போட்டு தனது அணியின் வெற்றியை உறதிசெய்தார்.

இரண்டாம் கட்டப் போட்டியில் தென் மாகாண அணியின் பின்கள வீரர்கள் சிறந்த வியூகங்களுடன் விளையாடி சப்ரகமுவ அணியின் முன்கள வீரர்களுக்கு பலத்த சவாலாக விளங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் இந்த சுற்றுப் போட்டியில் தோல்வி அடையாமல் இருக்கும் இரண்டு அணிகளில் ஒன்றான சப்ரகமுவ மாகாண அணி இந்தப் போட்டியை குறைந்தபட்சம் வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டால் இறுதி ஆட்ட வாய்ப்பை பெற்றுவிடும்.

மறுபுறத்தில் 2 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மாத்திரமே தென் மாகாண அணி இறுதி ஆட்டத்தில் விளையாட தகுதிபெறும்.

எம்.எவ். ரஹ்மான் பயிற்சி அளிக்கும் சப்ரகமுவ மாகாண அணிக்கு எம்.என்.எம். ஷிபாம் தலைவராக விளையாடுகின்றார். 

சிறந்த மத்திய கள வீரராக திறமையை வெளிப்படுத்தி வரும் இவர் அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

சுற்றுப் போட்டியில் 6 கோல்களைப் போட்டதன் மூலம் அதிக கோல்கள் போட்டவர்கள் பட்டியலில் நிதர்ஷனுடன் முதலாம் இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ள முஷ்பிக் என்ற வீரரமு; சப்ரகமுவ அணியில் இடம்பெறுகின்றார்.

மறுபுறத்தில் ஷிரன்த குமாரவினால் பயிற்றுவிக்கப்படும் தென் மாகாண அணிக்கு மற்றொரு அனுபவசாலியான கோல்காப்பாளர் எம். ரிஷாத் அணித் தலைவராக விளையாடுகின்றார். 

சுப்புன் தனஞ்சய அணியில் முக்கிய வீரராக இடம்பெறுகின்றார்.

இரண்டாம் கட்ட அரை இறுதிப் போட்டியை இலகுவானதாக கருதவில்லை என இரண்டு அணிகளினதும் பயிற்றுநர்கள் தெரிவித்தனர்.

இந்த முக்கிய போட்டியில் வெற்றிபெறவேண்டும் என்ற குறிக்கோளுடன் சிறந்த வியூகங்களை அமைத்து விளையாடவுள்ளதாக சப்ரகமுவ மாகாண அணி பயிற்றுநர் எம்.எவ். ரஹ்மானும், தென் மாகாண அணி பயிற்றுநர் ஷிரன்த குமாரவும் தெரிவித்தனர்.

குழாம்கள்

சப்கரமுவ மாகாணம்: 

  • எம்.என்.எம். ஷிபான் (தலைவர்)
  • எம்.ஏ.என். கிம்ஹான
  • சி. பெரேரா 
  • எம். இஜாஸ், டி. லியனகே
  •  எம். முஷிப், எம். முஷ்பிக்
  • ஐ. பெர்னாண்டோ
  • ஏ. தேஷான்
  • என். தனஞ்சய
  • எம். ரசான், எம். பஸ்லான் 
  • எம். ரம்ஸின்
  • எஸ். ஹசன் 
  • எல். மதுவன்த
  • எஸ். ப்ரியசான்
  • எம். முஹாஜித்
  • எம். சப்ஹான் 
  • பி. குமாரகே
  •  எம். ஷஹீல்
  • எப். இஸ்ஸத்

தென் மாகாணம்: 

  • எம்.ஆர். ரிஷாத் (தலைவர்)
  • ஏ. சத்துரங்க
  • சுப்புன் தனஞ்சய 
  • ரி. தனுஷ்க 
  • என். ராஜபக்ஷ
  • எல். தனஞ்சய
  • ஏ. கவிந்து 
  • ருமேஷ் மெண்டிஸ் 
  • எம். ரிஸ்லான் 
  • என். விஹங்க 
  • கெஷான் துமிந்து
  • எம். லுப்தி 
  • கே. சத்சர 
  • எம். பசெச்
  • சி. முடிதுபிட்டிய 
  • டி. பிரபாத் 
  • எம். நாதன்
  • எஸ். சச்சித் 
  • பி. வீரப்புலி
  •  கே. பீமல் 
  • எம். பர்ஹான்
  • எமில்க நிமால்
  • எஸ். மத்ய

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியனஷிப் 2024:...

2024-09-14 13:12:09
news-image

சமூக ஊடகங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

2024-09-13 19:18:49
news-image

தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர்...

2024-09-12 21:54:30
news-image

தெற்காசிய கனிஷ்ட, தேசிய கனிஷ்ட சாதனைகளுடன்...

2024-09-12 15:41:14
news-image

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண 2023...

2024-09-11 20:04:05
news-image

தென் ஆபிரிக்கா ஏ அணிக்கு எதிரான...

2024-09-11 20:17:03
news-image

எய்ட்எக்ஸின் 32ஆவது விளையாட்டு விழாவில் 64...

2024-09-11 18:04:26
news-image

செப்பக் டெக்ரோ உலக சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு...

2024-09-11 12:51:44
news-image

பாரிஸ் பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற சமித்த...

2024-09-11 12:45:41
news-image

சுஜான் பெரேரா 2 பெனல்டிகளைத் தடுத்ததால்...

2024-09-11 00:58:18
news-image

மகளிர் 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை...

2024-09-10 19:10:56
news-image

இந்திய டெஸ்ட் குழாத்தில் மீண்டும் ராகுல்,...

2024-09-10 14:11:46