டி.எப்.சி.சி வங்கி மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரகத்திற்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

By T. Saranya

02 Mar, 2022 | 09:17 AM
image

(நா.தனுஜா)

இலங்கையிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிக முயற்சியாண்மைகளுக்கு அவசியமான நிதிவழங்கலை விரிவுபடுத்தி, அதனூடாக தனியார்துறை அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் முன்னிலையில் டி.எப்.சி.சி வங்கிக்கும் அமெரிக்க அரசாங்கத்தின்கீழ் இயங்கும் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரகத்திற்கும் இடையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டது. 

டி.எப்.சி.சி வங்கியின் ஊடாக சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகளுக்கு அவசியமான நிதியுதவிகளை வழங்குவதானது, தற்போதைய நெருக்கடிநிலைக்கு மத்தியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை உயர்த்துவதற்கும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும் பங்களிப்புச்செய்யும் என்று அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

அதுமாத்திரமன்றி இத்தகைய வலுவான கூட்டிணைவின் மூலம் சிறிய மற்றும் நடுத்தர வணிக முயற்சியாண்மைகளின் வருமானத்தை உயர்த்துவதற்கும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு புதிய வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கும் வாய்ப்பேற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஊடாக சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகளுக்கான நிதிவழங்கலை மேம்படுத்துவதற்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப ரீதியான உதவிகளை வழங்குவதற்கும் சந்தைத்தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கும் குறிப்பாக மேல்மாகாணத்திற்கு வெளியே இயக்குகின்ற மற்றும் பெண்களால் நடாத்தப்படுகின்ற முயற்சியாண்மைகளுக்கான வர்த்தக்குத்தகையை அணுகும் வாய்ப்பை அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட டி.எப்.சி.சி வங்கியின் பிரதம நிறைவேற்றுப்பணிப்பாளர் திமால் பெரேரா கூறியதாவது:

'எமது வாடிக்கையாளர்களில் பெருமளவானோர் சிறிய மற்றும் நடுத்தர வணிக முயற்சியாண்மைகளை ஆரம்பித்திருப்பது குறித்தும் அவை வெகுவாக வளர்ச்சிகண்டு, நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுவான பங்களிப்பை வழங்கிவருவது குறித்தும் நாம் பெருமையடைகின்றோம். 

அந்தவகையில் தற்போது கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அவசியமான பங்களிப்பை வழங்குவதற்கான எமது இயலுமையை மேலும் விரிவுபடுத்திக்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம்' என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Daraz ஊடாக கிடைக்கும் பொருளாதார சுதந்திரம்

2023-02-04 10:41:45
news-image

OPPO A Series அணிவகுப்பின் புதிய...

2023-02-03 10:59:13
news-image

SLIM Brand Excellence Awards 2022இல்...

2023-02-02 15:16:00
news-image

உதய சூரியனைப்போல் நம்பிக்கையுடைய சனிதா உருவாக்கிய...

2023-02-01 16:08:17
news-image

கொழும்பு கிளப்பின் புதிய தலைவராக முதல்...

2023-01-31 15:05:30
news-image

வரலாற்றில் முதல் முறையாக 3 பில்லியன்...

2023-01-27 15:36:26
news-image

40 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய...

2023-01-26 10:52:26
news-image

இலங்கை குழந்தைகளின் பாதுகாப்புக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை...

2023-01-11 14:45:57
news-image

'Lucky Freedom' (லக்கி ப்ரீடம்) புதிய...

2023-01-06 12:31:42
news-image

மக்கள் வங்கியின் தற்காலிக பிரதம நிறைவேற்று...

2023-01-01 12:15:59
news-image

பாத்பைன்டர் குழுமத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி இந்தியாவிலுள்ள...

2022-12-23 15:08:59
news-image

DFCC வங்கி GoodLife X உடன்...

2022-12-22 15:59:53