இலங்கையின் வரலாற்றுக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு கற்பனை கதாபாத்திரங்களாலும் மற்றும் இடங்களிலும் காட்சியமாக்கப்பட்டு  சமகால அரசியலையும்  பொருளாதாரத்தையும் மற்றும் உலகின் உண்மை தன்மைகளை தழுவி எழுதப்பட்டுள்ளது இந்த நாடகம். 

இலங்கை நாடக வரலாறு பல்வேறு விதமான நாடக வகைகளை கடந்து வந்துள்ளது. அவ்வகையில் முற்றிலும் மாறுபட்ட இக்காலத்திற்கு ஏற்ற நவீன இசை நாடகமாக அரங்கேற இருக்கும் அசல் இசை நாடகம் "அகுன" (மின்னல்).

முற்றிலும் மின்மயமாக்கப்பட்ட "அகுன" (மின்னல்) மும் மொழியிலும் தயாராகியுள்ளது. சிங்களம் ,தமிழ் மற்றும் ஆங்கிலத்தின் கலவையாக தயாராகும் இந்நாடகம் "கலா கீர்த்தி" லக்ஷ்மன் டி சில்வா அவர்களால் இயக்கப்பட்டு மார்ச் 11,12, 13 ஆம் திகதிகளில் அரங்கேற்றப்படவுள்ளது. 

ஜெரோம் லக்ஷ்மன் டி சில்வா பற்றிய அறிமுகம் ஆங்கில நாடக ரசிகர்களுக்கு ஒன்றும் புதிதல்ல.... இந்நாடகத்தின் பின் சிங்களம் மற்றும் தமிழ் நாடக ரசிகர்களுக்கு அவரின் அறிமுகம் தவிர்க்க முடியாததொன்றாகும்.

"அகுன" (மின்னல்) ஆரம்பிக்கப்பட்ட விதம் சற்று நம்மிடையே ஆச்சரியத்தை உண்டு பண்ணும்.... லயனல் வென்ட் வொர்க்ஷாப் பிளேயர்ஸ் நாடக பயிற்சி முகாம் ஒன்றில் நடத்தப்பட்ட பிரெய் ஸ்ட்ரோமிங் என்ற பயிற்சியின் மூலமாக கலைஞர்கள் எல்லோரும் அவர்களின் கருத்துக்களின் மூலத்தை மையமாக  வைத்து தோன்றியதே இந்த நாடகம்.

ஏறக்குறைய 60 க்கும் மேற்பட்ட லயனல் வென்ட் கலைஞர்களின்  அயராத உழைப்பாலும் பயிற்சியினாலும் உருவாகிறது. கோவிட் தோற்றுப் பரவல் காலங்களிலும் கூட ஒளி உரு கலந்துரையாடல் மூலம் வசனங்கள் மற்றும் பாடல்களை பயிற்சி செய்து நாடகத்தை இவ்வளவு காலம் கொண்டுவந்துள்ளார்கள்.

கதை, எழுத்து ஜெரோம் டி சில்வா மற்றும் மகேஷ் விக்ரமசிங்க. இசை அமைப்பாளர்கள் அமில விஜயரத்ன மற்றும் பிரபோத புத்திபிரிய. நடன அமைப்பு ஜெரோம் டி சில்வா. இணை நடன அமைப்பாளர் இந்திக்க லக்மால்

பற்று சீட்டுகளை மார்ச் 1 முதல் லயனல் வென்ட் அரங்கில் பெற்றுக்கொள்ளலாம் காட்சிநேரங்கள்

மார்ச் 11 வெள்ளி பிற்பகல் 7 மணி

மார்ச் 12 சனி 3 மணி (பி.ப) 7 மணி (பி.ப)

மார்ச் 13 ஞாயிறு 3மணி(பி.ப) 7மணி (பி.ப)

பற்றுச்சீட்டுகளை முன்பதிவு செய்யுங்கள். நல்லதொரு அனுபவத்தை காணத்தவறாதீர்கள்....