கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 168 நபர்கள் குணமடைவு

By Vishnu

01 Mar, 2022 | 04:40 PM
image

கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 168 நபர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை 609,092 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 20,720 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவளை நாட்டில் நேற்றைய தினம் 997 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் நோயாளர்களின் தொகை 646,034 ஆக அதிகரித்தது.

அதேநேரம் இது தொடர்பாக 16,222 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right