சீனாவின் உகான் சந்தையில் இருந்து தான் கொரோனா பரவியது - ஆய்வில் தகவல் !

01 Mar, 2022 | 05:09 PM
image

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாத காலப்பகுதிகளில் கொரோனா வைரஸ் உருவானது.

பின்னர், உலகம் முழுவதும் பரவியது. அதன் தாக்கம் இன்னும் நீடித்து வருகிறது. 

சீனாவில் உகான் நகரில் உள்ள ஹுனன் மார்க்கெட்டில் இருந்துதான் கொரோனா உருவானதாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சீன அதிகாரிகள் அடையாளம் கண்டறிந்தனர்.

கொரோனா உருவானது குறித்து கடந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பு ஆய்வு நடத்தியது.

அதில், உஹான் சந்தையில் வௌவாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக கண்டறியப்பட்டது.

சீனாவில் உள்ள வைரஸ் ஆய்வுக்கூடத்தில் கொரோனா வைரசை செயற்கையாக சீனா உருவாக்கியதாகவும் ஒரு கருத்து உலவுகிறது.

இந்தநிலையில், விஞ்ஞானிகள் சிலர் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்று 3 ஆய்வுகளை நடத்தினர்.

அவற்றின் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். 

அவற்றில் 2 ஆய்வுகளில், உகான் நகரில் உயிருடன் பாலூட்டி ரக விலங்குகளை விற்கும் உஹான் மொத்த மார்க்கெட்டில் இருந்துதான் கொரோனா பரவியதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மரபணு பகுப்பாய்வு மூலம் இதை கண்டறிந்து, அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளனர். 

கொரோனா மாதிரிகளுக்கும், உஹான் மார்க்கெட்டுக்கும் இடையிலான தொடர்பை புவியியல் சார்ந்த பகுப்பாய்வு மூலம் உறுதி செய்துள்ளனர்.

3 ஆவது ஆய்வில், அதே சந்தையில் விற்கப்பட்ட விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 தடவை கொரோனா பரவியதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், சீன ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக கூறப்படுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வுகளை நடத்தியவர்களில் ஒருவரான அரிசோனா பல்கலைக்கழகத்தின் பரிணாம உயிரியல் நிபுணர் மைக்கேல் வோரோபி, ‘‘எல்லா ஆய்வுகளையும் இணைத்து பார்த்தால், உஹான் மார்க்கெட்டில் இருந்து கொரோனா உருவானது தெளிவாக தெரியும்’’ என்று தெரிவித்துள்ளார்.

எந்த விலங்கில் இருந்து கொரோனா பரவியது என்று விஞ்ஞானிகள் உறுதிபட தெரிவிக்கவில்லை.

இருப்பினும், ‘ரக்கூன் டாக்’ என்ற பாலூட்டி வகை நாயிடம் இருந்து பரவி இருக்கலாம் என்று கிறிஸ்டியன் ஆன்டர்சன் என்ற வைரஸ் நோய் நிபுணர் கணித்துள்ளார்.

இந்த விலங்கு, உணவுக்காகவும், உரோமத்துக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

அதே சமயத்தில், இந்த ஆய்வு முடிவுகளை ஏற்றுக்கொள்ளாத விஞ்ஞானிகளும் உள்ளனர்.

உஹான் மார்க்கெட்டில் விற்கப்பட்ட விலங்குகளில் கொரோனா இருந்ததற்கு போதிய நேரடி ஆதாரங்கள் இல்லை என்று ஜெஸ்சி புளும் என்ற வைரஸ் நோய் நிபுணர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடத்தி கொலைசெய்யப்பட்டு முதலைக்கு இரையான வயோதிப...

2022-10-07 10:30:14
news-image

பிரித்தானியாவில் மின்வெட்டு

2022-10-07 10:44:24
news-image

வளர்ப்பு மகனின் விதைகளை நீக்க முயன்ற...

2022-10-07 10:48:22
news-image

தாய்லாந்தில் முன்பள்ளி குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில்...

2022-10-06 15:38:43
news-image

மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு : மேயர் உள்பட...

2022-10-06 14:01:44
news-image

காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழப்பு ;...

2022-10-06 15:36:32
news-image

பாரத் ராஷ்டிரிய சமிதி என்ற தேசியக்...

2022-10-06 13:27:45
news-image

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக...

2022-10-06 12:55:32
news-image

காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் இணைந்த...

2022-10-06 13:27:19
news-image

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ஈரான் சிறுமியை...

2022-10-05 17:12:16
news-image

இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர்...

2022-10-05 16:24:29
news-image

இந்தியா - எத்தியோப்பியா ஆகிய நாடுகள்...

2022-10-05 16:36:57