2021/2022 பெரும்போக விளைச்சல் குறைவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபா நட்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி குறித்த கால கடத்தில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்ட 1.1 மில்லியன் விவசாயிகளுக்கு அடுத்த வாரம் முதல் நட்டஈடு வழங்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.