அரச வைத்தியசாலைகளிள் நோயாளர்களுக்கு சிகிச்சையளிகப்பதற்கான மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவக் கருவிகளுக்கான வசதிகள் போதிய அளவு இல்லையென  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை தாதியர் சங்கம் குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

குறித்த பற்றாக்குறை தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும், எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை பற்றாக்குறையான  மருந்துப் பொருள் மற்றும் சிகிச்சைக் கருவிகளை தேவையான இடங்களுக்கு அனுப்பி வருவதாக மருந்துப் பொருள் விநியோகப்பிரிவு தெரிவித்துள்ளது.