மொனராகல - தம்கல்ல பிரதேசத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கணவன் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ள்ளார். 

நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கணவன் கோபமடைந்து கூர்மையான ஆயுதத்தால் மனைவியை தாக்கியதில் பலத்த காயமடைந்த குறித்த பெண் மொனராகல - சிரிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்துள்ளதவர் 26 வயதுடைய எனவும்  34 வயதுடைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்