உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்படுவது அரசாங்கத்துக்கு ஆரோக்கியமானதல்ல. மஹிந்தவின் காலத்தில் கூட இந்தளவு காலம் தேர்தல் பிற்படவில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.