தனுஷின் 'மாறன்' பட முன்னோட்டம் வெளியீடு (காணொளி இணைப்பு)

Published By: Digital Desk 4

28 Feb, 2022 | 05:25 PM
image

நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகி இருக்கும் மாறன் படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. இதனை தனுசின் ரசிகர்களும், பொதுமக்களும் புதிய தகவல் தொழில்நுட்ப உத்தி மூலம் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

'துருவங்கள் பதினாறு', 'மாபியா சப்டர் 1' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'மாறன்'. இந்தப் படத்தில் தனுஷ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'மாஸ்டர்' பட புகழ் நடிகை மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன், இளவரசு, ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ஜெயப்பிரகாஷ், ராம்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விவேகானந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசை அமைத்திருக்கிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. ஜி. தியாகராஜன் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் திகதியன்று டிஸ்னி ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு இப்படத்தின் முன்னோட்டம் இன்று ரசிகர்களால் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தில் 'வாழ்க்கைல  நேர்மையாய் இருக்கிறது ரொம்ப முக்கியம். அதைவிட முக்கியம் சாமர்த்தியமா இருக்கிறது..'' என்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அத்துடன் இந்த முன்னோட்டத்தில் நடிகர் தனுஷ் புலனாய்வு ஊடகவியலாளர் வேடத்தில் நடித்திருக்கிறார் என்பதும் தெரிய வருவதால் ரசிகர்கள் கட்டற்ற ஆர்வத்தில் பட வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35