நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 14 பேரை  எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவில் நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க, நிதியமைச்சின் செயலாளர் மற்றும் சுங்க பணிப்பாளர் நாயகம் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வருட ஆரம்பத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது பியர் நிறுவனமொன்றின் வரி விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட மோசடியில் அரசாங்கத்துக்கு 6 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவினை சிங்கள தேசிய முன்னணி மற்றும் ஆறு கட்சிகள் இணைந்து தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.