Vision Care இன் வர்ணமயமான கனிஷ்ட ஓவியப்போட்டி நிறைவு

Published By: Priyatharshan

12 Oct, 2016 | 02:30 PM
image

சிறுவர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், சுய ஆக்கத்திறன் வெளிப்பாட்டையும் வெளிக்கொணரும் வகையில், நாட்டின் முன்னணி கண் பராமரிப்பு மற்றும் கேட்டல் குறைபாடு தீர்வுகளை வழங்கும் Vision Care நிறுவனம், களிப்பான அம்சங்கள் நிறைந்த விறுவிறுப்பான மற்றும் புத்தாக்கத்திறன் வாய்ந்த ஓவியப்போட்டி ஒன்றை அதன் நவீன வசதிகள் படைத்த தலைமையகத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

உலகளாவிய ரீதியில் சிறுவர் தினம் ஒக்டோபர் 1 ஆம் திகதி கொண்டாடப்பட்ட போது, இத்தினத்தைக் குறிக்கும் வகையில் இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“கிட்ஸ் அன்ட் கலர்ஸ்” எனப்பெயரிடப்பட்டிருந்த இந்த கனிஷ்ட ஓவியப்போட்டியில், நாடு முழுவதையும் சேர்ந்த 12 வயதுக்குக்குறைந்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள் பங்குபற்றியிருந்தனர். 

இறுதி போட்டியில் 50 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்கள் அனைவருக்கும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டிருந்ததுடன் பெறுமதி வாய்ந்த சான்றிதழ்கள் மற்றும் சிறந்த ஐந்து ஓவியங்களுக்கான பணப்பரிசுகளும் வழங்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக, சௌந்தர்ய கலை பல்கலைக்கழகத்தின் சௌந்தர்ய கலை பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர். எம்.ஆர். பொடிநிலமே பங்கேற்றிருந்தார். 

மத்தியஸ்தர்கள் குழுவில், ஓவியக் கலைஞரான கல்வி அமைச்சின் - அபிவிருத்தி உதவியாளர் சேனாநந்த இந்திரஜித் மேர்திஸ் மற்றும் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களான தீப்த குமார மற்றும் சத்சர இலங்கசிங்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

Vision Care நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரான ஜானக ஃபொன்சேகா கருத்துத்தெரிவிக்கையில்,

“சிறுவர்கள் ஓவியங்களில் ஈடுபடுவது என்பது அவர்களுக்கு சிறந்த பயிலும் அனுபவமாக அமைந்துள்ளது. அவர்களுக்கு சுய திறன் வெளிப்பாட்டை மேம்படுத்த உதவியாக அமைந்திருப்பதுடன், நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் முடியும். அத்துடன் மேலும் பல அனுகூலங்களையும் பெற்றுக்கொள்ளலாம். உயர்ந்த மட்ட பங்குபற்றல் மற்றும் ஆர்வத்தைக் கண்டு நாம் வியப்படைந்தோம்” என்றார்.

மாணவர்களை பொறுத்தமட்டில் ஓவியம் என்பது, சித்திரம் ஒன்றை வரைந்து, அதற்கு வர்ணம் தீட்டி, அதை ஒரு பகுதியில் காட்சிப்படுத்துவது என்பதற்கு அப்பாற்பட்ட விடயமாக அமைந்துள்ளது. சிறுவர்கள் மத்தியில் புத்தாக்க சிந்தனையை விருத்தி செய்ய இது உதவியாக அமையும். ஏனைய சிறுவர்களுடன் இணைந்து, திறந்த மனதுடன், விடயமொன்றில் கவனம் செலுத்தி, அதை விவரித்து, ஆராய்ந்து மற்றும் தமது உணர்வுகளை வெளிப்படுத்தி தமது நம்பிக்கையை கட்டியெழுப்பிக் கொள்ள ஏதுவாக அமைந்திருக்கும்.

சந்தைப்படுத்தல் பிரிவைச் சேர்ந்த அசோகா பிரியதர்ஷினி கருத்துத்தெரிவிக்கையில்,

“சிறுவர்கள் மத்தியில் இது போன்ற பல நிகழ்வுகளை முன்னரும் Vision Care முன்னெடுத்துள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த கனிஷ்ட ஓவிய போட்டியை முன்னெடுத்துச் செல்ல நாம் திட்டமிட்டுள்ளோம், அவர்களின் ஆளுமைகள், திறன் மற்றும் புத்தாக்கத்திறன் ஆகியவற்றை ஊக்குவிக்கும் பல செயற்பாடுகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

பல ஆண்டு காலம் அதன் நம்பிக்கையை வென்ற நாமம் மற்றும் துறையில் தொடர்ச்சியான நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றமைக்காக புகழ்பெற்ற Vision Care,  கண் பராமரிப்பு மற்றும் கேட்டல் தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கின்றது. 

இதற்காக தகைமை வாய்ந்த நிபுணர்களைக் கொண்டு நாடு முழுவதும் பரிபூரண கண் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக நவீன வசதிகளைப் பயன்படுத்துவதுடன் ஒரு கண்ணின் பார்வைத் திறன்  மற்றும் ஆரோக்கிய நிலை ஆகியவற்றை இனங்காண்கிறது. கொழும்பு 07 பகுதியில் அமைந்துள்ள அதன் நவீன வசதிகள் படைத்த காட்சியறைக்கு மேலதிகமாக, Vision Care நாடு முழுவதும் 38 கிளைகளைக் கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right