உக்ரேனில் உயர்கல்வி கற்கும் 20 வயதான ஈரானியப் பிரஜையொருவர் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி துருக்கியிலிருந்து இலங்கைக்கு வந்து இலங்கை ஊடாக ஜேர்மனிக்கு தப்பிச் செல்ல முற்படுகையில் கைதுசெய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு துருக்கிக்கு நாடு கடத்தப்பட்டார்.

இலங்கைக்குள் நுழைவதற்காக கிரீஸ் பிரஜை ஒருவரின் கடவுச்சீட்டை அவர் வழங்கினார்.

இது இன்டர்போல் தேடும் கடவுச்சீட்டு என விசாரணைகளில் தெரியவந்தது.

மேலும் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் உக்ரேனில் உயர்கல்வி கற்று வருவதுடன், ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே நிலவும் மோதல் காரணமாக துருக்கிக்கு சென்றிருப்பது தெரியவந்தது.