கொள்வனவு செய்யும் தினத்திலேயே விநியோகத்தை வாக்குறுதியளிக்கும் சரக்கியல் வழங்குநரான Hire1, ஒன்லைன் கொடுப்பனவு மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் ஆதரவுகளை வழங்கக்கூடிய இணையவழி வர்த்தகத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் WEBXPAY உடன் கைகோர்த்துள்ளது.
இந்த கைகோர்ப்பின் ஊடாக இணையவழி வர்த்தகத்தில் நுழையும் புதிய, சிறிய மற்றும் நடுத்தர வியாபார நிறுவனங்களுக்கு WEBXPAY இன் ஒன்லைன் கொடுப்பனவுகள் உள்ளடங்கிய முழுமையான தீர்வு வழங்கப்படவுள்ளதுடன் குறித்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு குறித்த தினத்திலேயே விநியோகத்தை ர்Hire1 மேலாண்மை செய்யவுள்ளது.
இலங்கையில் இணையவழி வர்த்தகம் துரிதமாக வளர்ச்சியடைந்து வருவதுடன் மிகப்பெரிய நிறுவனங்கள் முதற்கொண்டு சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் வரையான அனைத்து நிறுவனங்களும் அதன் பொருட்கள் மற்றும் இலத்திரனியல் பொருட்களை ஒன்லைன் மூலமாக விற்பனை செய்து வருகின்றன.
இன்றைய வாடிக்கையாளர்கள் கடைகளுக்குச் செல்லாமல் தமது திறன்பேசிகள் ஊடாக விருப்பத்துக்கேற்ப கொள்வனவுகளை மேற்கொள்ள அதிகம் விரும்புகின்றனர்.
“ஒன்லைன் வர்த்தகத்தில் கொடுப்பனவுகள் மற்றும் சரக்கியல் ஆகியன மிக முக்கிய சேவைகளாக காணப்படுகின்றன. தரமான சேவை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களை வழங்கிடும் எம்மைப்போன்ற குறிக்கோளைக் கொண்ட WEBXPAY உடன் இணைந்து பணியாற்றக் கிடைத்தமை குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த கைகோர்ப்பு ஊடாக ஒன்லைன் வர்த்தகத்திற்கு பெறுமதியை சேர்க்க நாம் எதிர்பார்த்துள்ளோம்” என Hire1 இன் ஸ்தாபகர் பிரதம நிறைவேற்று அதிகாரி யெஷாந்த் குணவர்தன தெரிவித்தார்.
இந்தப் பங்காண்மை குறித்து WEBXPAY இன் ஸ்தாபகர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஒமர் ஷஹிப் கருத்து தெரிவிக்கையில்,
“Hire1 உடனான எமது பங்காண்மை மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களது தொழில்நுட்பம் சார்ந்த சேவையுடன் கடையிலிருந்து வீட்டு வாசலுக்கே பொருட்களை வழங்க முடிந்துள்ளது.
இதன் மூலமாக சிறுதவறுகள் மற்றும் தாமதங்களை குறைத்துக் கொள்ள முடியும்” என்றார்.
“WEBXPAY ன் ஒருங்கிணைந்த தளமானது, SME’ கள், புதிய மற்றும் வியாபாரங்கள் 48 மணித்தியாலங்களில் குறைந்த நிதி உறுதிப்பாட்டுடன் தங்களது ஒன்லைன் வர்த்தகங்களை அமைத்துக்கொள்ள வழிவகுக்கிறது. கடந்த 6 மாத செயல்பாடுகளில் அவர்களின் பாதுகாப்பு, குறைந்த செலவு,plug-and-play தீர்வு ஆகியன 200 இற்கும் மேற்பட்ட வியாபாரங்களைச் சென்றடைந்துள்ளன. WEBXPA இன் இணையவழி வர்த்தக தீர்வானது இத்தகைய வியாபாரங்களின் ஒன்லைன் வர்த்தகத்தை இலகுவாக்குகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM