உக்ரைனுக்கு செயற்கைக்கோள் மூலம் இணைய வசதி வழங்கிய எலான் மஸ்க்

Published By: Digital Desk 3

28 Feb, 2022 | 11:06 AM
image

உக்ரைன் நாட்டிற்குள் ரஷ்யாவின் ஊடுருவலால் இணைய இணைப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எலான்மஸ்க் தனது ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிறுவனம் மூலம் ஸ்டார்லிங் எனும் செயற்கைக்கோள் வழி இணைய இணைப்பை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 24 அன்று இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் ஊடுருவியது . தற்போது தலைநகர் கீவ் வரை வந்து பல இராணுவ தளங்களை அழித்துள்ளனர். 

இந்நிலையில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். ஏவுகணை தாக்குதல்கள் குண்டு வீச்சு. சைபர் தாக்குதல் போன்றவற்றால் உக்ரைனின் இணைய இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவின் எலான் மஸ்க்கிடம் உக்ரைன் டிஜிட்டல் அமைச்சர் உதவி கோரியிருந்தார்.

அது தொடர்பான சமூக ஊடகப் பதிவில் அவர் கூறியதாவது,

நீங்கள் செவ்வாய் கிரகத்தில் குடியேற்றத்தை முயற்சிக்கிறீர்கள். ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது. உங்கள் ராக்கெட்டுகள் வெற்றிகரமாக விண்ணிலிருந்து திரும்புகிறது. ரஷ்ய ராக்கெட்டுகளோ உக்ரைனிய குடிமக்களை தாக்குகின்றன. உக்ரைனுக்கு ஸ்டார்லிங்க் நிலையங்களை வழங்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். என கூறியிருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவையை உக்ரைனில் செயல்படுத்தியுள்ளார் இதனை தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். 

ஸ்டார்லிங்க் என்பது 2.000க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களின் தொகுப்பை இயக்குகிறது. உலகம் முழுவதும் இணைய இணைப்பை வழங்குவதே இதன் நோக்கம். எலான் மஸ்க் நிறுவனம் வெள்ளிக்கிழமை மேலும் 50 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை ஏவியது. அவை பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலஸ்தீனியர்கள் என நினைத்து இஸ்ரேலை சேர்ந்தவர்கள்...

2025-02-18 14:44:05
news-image

சர்ச்சைக்குரிய பிரபல யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியாவுக்கு...

2025-02-18 14:59:48
news-image

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி.. விஷத்தைச்...

2025-02-18 14:37:48
news-image

“ஐரோப்பா புட்டின் டிரம்ப் அச்சிற்கு சவால்...

2025-02-18 12:25:23
news-image

கர்நாடகாவில் 15 வயது சிறுவன் சுட்டதில்...

2025-02-18 13:23:52
news-image

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த விமானம் -...

2025-02-18 08:57:01
news-image

வியட்நாமில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர்...

2025-02-18 09:32:42
news-image

அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை...

2025-02-17 12:46:28
news-image

உக்ரைனிற்கு பிரிட்டிஸ் படையினரை அனுப்பதயார் -...

2025-02-17 10:38:31
news-image

ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் - உக்ரைன்...

2025-02-16 13:43:37
news-image

ஐரோப்பாவை தவிர்த்துவிட்டு உக்ரைன் குறித்து அமெரிக்க...

2025-02-16 13:41:32
news-image

ஆஸ்திரியாவில் கத்திக்குத்து தாக்குதல் - 14...

2025-02-16 13:35:43