டொலருக்கு எதிரான ரஷ்ய நாணயம் பாரியளவில் சரிவு

Published By: Vishnu

28 Feb, 2022 | 10:07 AM
image

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்ததை அடுத்து, ரஷ்ய நாணயமான ரூபிள் டொலருக்கு எதிராக 40% வரை சரிந்துள்ளது.

Image

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் அவற்றின் நட்பு நாடுகள் பல ரஷ்ய வங்கிகளை முக்கிய சர்வதேச கட்டண முறையான "SWIFT" இல் இருந்து துண்டிக்க ஒப்புக் கொண்டுள்ளதையடுத்து இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.

"SWIFT"  என்ற உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதித் தொலைத்தொடர்புக்கான சமூகத்திலிருந்து பல ரஷ்ய வங்கிகளை துண்டிக்கும் நடவடிக்கை உக்ரேன் மோதலின் பின்னர் மொஸ்கோ மீது சுமத்தப்பட்ட கடுமையான நடவடிக்கையாகும்.

ரஷ்யாவின் மத்திய வங்கியின் சொத்துக்களும் முடக்கப்படும், இது நாட்டின் வெளிநாட்டு இருப்புக்களை அணுகும் திறனைக் கட்டுப்படுத்தும்.

ரஷ்யா அதன் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கு SWIFT அமைப்பையே பெரிதும் நம்பியுள்ளது.

அதிகரித்து வரும் பதற்றங்களும் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு $100 (£75)க்கு மேல் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியா உடனான தூதரக மோதலால் இரு...

2023-09-26 17:04:53
news-image

கிரிமியாவில் உள்ள ரஸ்ய கருங்கடல் கடற்படை...

2023-09-26 15:22:17
news-image

சீக்கியர் படுகொலை - கனடாவின் விசாரணைகளிற்கு...

2023-09-26 11:03:51
news-image

ரூ.1,500 கடனை திருப்பி தராததால் பிஹாரில்...

2023-09-26 10:56:21
news-image

அதிமுக- பாஜக கூட்டணி முறிந்தது! அதிமுக...

2023-09-25 17:44:24
news-image

எனது பெற்றோர் அகதிகள் நானும்அகதி எனது...

2023-09-25 12:36:49
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து...

2023-09-25 11:12:56
news-image

தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 19...

2023-09-25 09:59:32
news-image

சூரியனை சுற்றியுள்ள மிகவும் ஆபத்தான சிறுகோளின்...

2023-09-25 06:35:43
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் படுகொலை - அமெரிக்காவே...

2023-09-24 13:23:59
news-image

பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் :...

2023-09-24 14:33:39
news-image

உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன்...

2023-09-23 12:24:13