உக்ரேனில் ஏற்பட்டுள்ள மோதலால் எரிசக்தி விநியோகம் தடைபடலாம் என்ற கவலைகளுக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிசக்தி அமைச்சர்கள் திங்களன்று பிரஸ்ஸல்ஸில் அவசரக் கூட்டத்தை நடத்துகின்றனர்.
ஐரோப்பாவின் முன்னணி எரிவாயு வழங்குனரான ரஷ்யாவின் உக்ரேன் மீதான படையெடுப்பு, எரிசக்தி விநியோகங்களுக்கு இடையூறு ஏற்படுவது பற்றிய கவலைகளை கூர்மையாக்கியுள்ளது.
அதேநேரம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இறக்குமதி செய்யப்பட்ட புதைபடிவ எரிபொருட்களை நம்பியிருப்பது பற்றிய ஆய்வுகளை அதிகப்படுத்தியுள்ளது.
இந் நிலையில் மேற்கண்ட சந்திப்பின்போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எரிசக்தி அமைச்சர்கள் சாத்தியமான ஆற்றல் வழங்கல் மற்றும் உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து எரிவாயு இருப்புக்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பார்கள்.
அவசரக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் விநியோகத்தைப் பாதுகாத்தல், மூலோபாய எண்ணெய் பங்குகளின் பயன்பாடு, எரிவாயு பங்குகளை நிர்வகித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் சாத்தியமான கூடுதல் நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று பிரான்ஸ் கூறியுள்ளது.
ஐரோப்பாவின் 40 சதவீத எரிவாயு திறனை ரஷ்யா வழங்குகிறது.
இந்த வார இறுதியில் ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்த பிறகு விளாடிமிர் புடின் விநியோகங்களைத் தடுக்கலாம் என்ற கவலைகள் எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM