பல பகுதிகளில் இன்று 5 மணி நேர மின்வெட்டு

Published By: Vishnu

28 Feb, 2022 | 07:18 AM
image

இன்றைய தினமும் திட்டமிட்ட சுழற்சி முறையிலான மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்க‍ை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அதற்கமைவாக A,B,C ஆகிய பகுதிகளில் காலை 8.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணிவரை 4 மணிநேரமும் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

ஏனைய பகுதிகளில் காலை 8.30 மணி தொடக்கம் இரவு 9.45 மணிவரை 5 மணிநேரம் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள மின் துண்டிப்பை குறைந்தது மூன்று மாத காலத்திற்கு மேற்கொள்ள வேண்டி நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நீர் மின் உற்பத்தி பிரதேசங்களில் காணப்படும் நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு மிகவும் குறைந்து காணப்படுவதாகவும் அந்தப் பகுதிகளில் தற்போது உள்ள நீர் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கே மின் உற்பத்தியை மேற்கொள்வதற்கு போதுமானதாக உள்ளதாகவும் மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

அதற்கிணங்க மீண்டும் மழை வீழ்ச்சி ஏற்பட்டு மேற்படி நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு மட்டம் அதிகரிக்கும் வரை தொடர்ச்சியாக மின்வெட்டை அமுல்படுத்த வேண்டி ஏற்படும்.

மேற்படி பகுதிகளில் தற்போது எதிர்பார்க்கும் மழை வீழ்ச்சியை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் எதிர்வரும் மே மாதம் அளவிலேயே மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

28-02-2022 மின்வெட்டு குறித்த அட்டவணைக்கு இங்கே அழுத்தவும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலங்கம - அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச்...

2026-02-13 18:44:31
news-image

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்...

2026-02-13 16:41:11
news-image

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது!

2026-02-13 17:48:57
news-image

9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க...

2026-02-13 16:50:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தெற்கு...

2026-02-13 17:19:56
news-image

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்தோரை மீளக்...

2026-02-13 17:17:15
news-image

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில...

2026-02-13 17:21:20
news-image

ஊழலை நிறுவனமயப்படுத்துகிறது தற்போதைய அரசாங்கம் -...

2026-02-13 17:23:55
news-image

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை: நாமல் ராஜபக்ஷ...

2026-02-13 17:06:13
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000...

2026-02-13 17:05:35
news-image

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை...

2026-02-13 16:56:36
news-image

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய கைதானவர்களின்...

2026-02-13 16:53:29