சர்வதேச நாணய நிதியத்துக்குச் சென்றாலும் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண முடியாது -  சம்பிக்க 

Published By: Digital Desk 4

28 Feb, 2022 | 07:39 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

சர்வதேச நாணய நிதியத்துக்கு சென்றாலும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண முடியாது.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்ல அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம் காலம் கடந்த தீர்மானமாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

வெகுவிரைவில் இலங்கை சர்வதேச கடன் பொறிக்குள் சிக்கும் அபாயம் : சம்பிக்க  ரணவக்க | Virakesari.lk

நாடு எதிர்கொண்டுள்ள தற்போதை பொருளாதார பிரச்சினைக்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்ற தலைப்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே இவவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு பாரிய பொருளாதார பிரச்சினைக்கு முகம்கொடுத்திருப்பது அனைவரும் அறிந்த விடயம். என்றாலும் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் எந்த வேலைத்திட்டத்தையும் எடுப்பதாக தெரியவில்லை.

மாறாக இருக்கும் பிரச்சினையை மக்களிடம் மறைக்கும் வேலைத்திட்டத்தையே அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. டொலர் பிரச்சினை காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது.

டீசல் இல்லாமை காரணமாக மின் உற்பத்திய நிலையங்கள் செயலிழந்துள்ளன. அதனால் தற்போது நாட்டில் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் பிரச்சினை உக்கரமடைந்துள்ள நிலையிலேயே சர்வதேச நாணய நிதியத்துக்கு நிதி அமைச்சர் செல்லப்போவதாக அரசாங்க தரப்பில் இருந்து செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது.

நிதி அமைச்சர் சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்வது நல்லது. என்றாலும் சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லுமாறு நாங்கள் ஆரம்பித்தில் சொன்ன சந்தர்ப்பத்தில் சென்றிருந்தால், தற்போதை பிரச்சினைக்கு ஏதாவது தீர்வை எதிர்பார்த்திருக்க முடியும்.

ஆனால் தற்போது காலம் கடந்துள்ளது. நாணய நிதியத்துக்கு சென்று எமது கோரிக்கைகளை முன்வைத்து, அது பரிசீலிக்கப்படுவதற்கு 4மாதங்கள் வரை செல்லும். 

மேலும் நாங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை தொடர்பில் மக்களுக்கு உண்மை தன்மையை வெளிப்படுத்தவேண்டும். ஆனால் அரசாங்கம் அதனை மறைத்து வருகின்றது.

இதன் விளைவுகள் தொடர்பில் நாங்கள் வெளிப்படுத்தும்போது எம்மை அடக்குவதற்கு முயற்சிக்கின்றனர்.

குற்றப்புலனாய் பிரிவுக்கு விசாரணைக்கு அழைக்கின்றனர். மக்களை தூண்டும் வகையில் பிரசாரம் செய்வதாக எமக்கு எதிராக குற்றம் சாட்டுக்கின்றனர். ஊடப அடக்குமுறையை மேற்கொண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது.

அத்துடன் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் பொட்டு கட்சியை பலப்படுத்தவே முயற்சிக்கின்றனார். அதற்காகவே கிராமங்களை அபிவிருத்தி செய்ய நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தி தனது கட்சிக்கு மக்கள் ஆணை இருப்பதை உறுதிப்படுத்தவே அவர் முயற்சித்து வருகின்றார். இந்லையில் மக்கள் சிந்தித்து செயற்படவேண்டும். இந்த பிரச்சினைக்கு அனைத்து ககட்சிகளும் ஒன்றிணைந்து தீர்வுகாணவேண்டும். அதற்காக 3வருட வேலைத்திட்டம் ஒன்றையாவது ஏற்படுத்தவேண்டும்.

மேலும் நாட்டில் டீசல் இல்லாமையால் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டு வருகி்ன்றது. நீர் நிலைகளில் நீர் பாரியளவில் குறைந்து வருகின்றது.

இந்த நிலை தொடருமானால் எடுத்த மாதமாகும்போது நீர் மின் உற்பத்திக்கும் பாதிப்பு ஏற்படும். எமது காலத்தில் சீ.எப்.எல். மற்றும் எல்.ஈ.டி. மின் குமிழ்களை அறிமுகப்படுத்தியதாலே மின் பாவனை குறைவடைந்துள்ளது.

அவ்வாறான மின் குமிழ்கள் இல்லை என்றால் தற்போது அமுலில் இருக்கும்  மின் துண்டிப்பு இன்னு பல மணி நேரம் அதிகமாக துண்டிக்கவேண்டி ஏற்பட்டிருக்கும். அதனால் நாடு எதிர்கொண்டுள்ள இந்த பிரச்சினைக்கு தீர்காண அனைத்து கட்சிகளும் ஒன்றினைந்து புதிய வேலைத்திட்டத்துக்கு செல்லவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வர்த்தகம், சந்தையை பன்முகப்படுத்தல் குறித்து ஜனாதிபதி...

2025-02-12 13:23:46
news-image

கார் - வேன் மோதி விபத்து...

2025-02-12 13:04:52
news-image

உலக அரச உச்சி மாநாட்டில் இன்று...

2025-02-12 13:10:44
news-image

யாழ்ப்பாணத்தில் மருத்துவ எரியூட்டியால் தமக்கு பாதிப்பு...

2025-02-12 13:10:15
news-image

கண்டி புகையிரத நிலைய சமிக்ஞை அறையின்...

2025-02-12 12:39:58
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூவர் காயம்...

2025-02-12 12:03:51
news-image

பலசரக்கு வியாபார நிலையத்தில் காலாவதியான பொருட்கள்...

2025-02-12 12:31:38
news-image

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பிரித்தானிய முன்னாள்...

2025-02-12 11:59:30
news-image

கந்தானையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-02-12 11:56:16
news-image

ஜனாதிபதிக்கும் "எதெர அபி அமைப்பு" க்கும்...

2025-02-12 12:04:55
news-image

ஆட்கடத்தலுக்கு எதிரான செயற்றிட்டம் குறித்து தாய்லாந்து...

2025-02-12 11:57:16
news-image

ஜனாதிபதிக்கும் ஜோன்ஸ் நிறுவன தலைமை நிறைவேற்று...

2025-02-12 12:04:36