(இராஜதுரை ஹஷான்)

நாட்டு மக்கள் எப்பிரச்சினையையும் எதிர்க்கொள்ளாமல் மகிழ்வுடன் உள்ளார்கள் என நினைத்துக்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கனவுலகில் வாழ்கிறார்.

ஜனாதிபதியின் பலவீனமான ஆட்சியை வீழ்த்த நாட்டு மக்கள் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து ஆவலுடன் உள்ளார்கள் என மக்கள் விடுதலை முன்னணியில் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக ராஜபக்ஷவினர் -  அனுரகுமார | Virakesari.lk

பதுளை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நல்லாட்சி அரசாங்கத்தின் பலவீனத்தன்மை 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவை நாட்டு மக்கள் தெரிவு செய்வதற்கு பிரதான காரணியாக அமைந்தது.நல்லாட்சி அரசாங்கத்தை வீழ்த்தி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த மக்கள் அதிக அக்கறை கொண்டிருந்தார்கள்.2019ஆம் ஆண்டு மக்கள் மத்தியி;ல் காணப்பட்ட அந்த உத்வேகம் தற்போது மீண்டும் வெளிப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான பலவீனமான அரசாங்கத்தை வீழ்த்த நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார்கள்.

நாட்டில் உழைக்கும் வர்க்கத்தினரது கருத்துகளுக்கும்,அவர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தவில்லை.

நூட்டு நாட்டு மக்கள் எப்பிரச்சினைகளையும் எதிர்க்கொள்ளவில்லை என்று எண்ணிக்கொண்டு ஜனாதிபதி கனவுலகில் வாழ்கிறார். அரசாங்கத்தின் தவறான தீர்மானமாக உர இறக்குமதி மற்றும் பாவனை தடை செய்யப்பட்டது அதன் விளைவை விவசாயிகள் இன்றும் எதிர்க்கொள்கிறார்கள்.

நாட்டில் விவசாயத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.விவசாயிகள் வீதிக்கிறங்கி போராடுகிறார்கள்.

விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்குவதாக குறிப்பிட்டுக்கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி விவசாயிகள் மத்தியில் ஆக்கிரோசமாக கருத்துரைக்கிறார். மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கம் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு கிடையாது.

 ராஜபக்ஷர்களின் பலவீனமான ஆட்சியை வீழ்த்த தற்போது அரசாங்கத்துடன் இணக்கமாக செயற்படும் அரசியல் கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணியமைக்கமாட்டோம். கூட்டணி அரசாங்கத்தில் ஒன்றினைந்தால் நல்லாட்சி அரசாங்கத்தின் நிலைமையே மீ;ண்டும் தோற்றம் ஐக்கிய தேசிய சக்தி தனித்து சிறந்த அரசாங்கத்தை ஸ்தாபிக்க நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.