இலங்கை வரும் பயணிகளுக்கான புதிய அறிவித்தல்

By Vishnu

27 Feb, 2022 | 09:05 AM
image

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகளுக்காக புதிய திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் மார்ச் 1 ஆம் திகதி முதல் இலங்கைக்கு வருவதற்கு முன்னதாக பி.சி.ஆர். அல்லது விரைவான ஆன்டிஜென் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

எவ்வாறாயினும் நாட்டுக்கு வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டையை உடன் வைத்திருத்தல் அவசியம்.

பகுதியளவு தடுப்பூசி செலுத்தப்பட்ட அல்லது தடுப்பூசி செலுத்தப்படாத பயணிகள் தங்கள் பயணத் திகதியிலிருந்து 72 மணி நேரத்திற்குள் எதிர்மறையான பி.சி.ஆர். மற்றும் ஆன்டிஜென் சோதனை முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right