5 முதல் 12 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசி செலுத்துவது குறித்து அவதானம்

26 Feb, 2022 | 07:30 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் 12 - 15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியை வழங்குவது தொடர்பிலும் , 5 - 12 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசியை வழங்குவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு - சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.விஜேசூரிய தெரிவித்தார்.

நாட்டில் தற்போது சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் வீதம் அதிகரித்து வருகின்ற நிலையில் , அவர்களது பாதுகாப்பின் நிமித்தம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாடளாவிய ரீதியிலுள்ள சகல வைத்தியசாலைகளிலும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எனவே 12 - 15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் அனைவரையும் முதற்கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறும் , 16 - 19 வயதுக்கு இடைப்பட்டவர்களை இரண்டாம் கட்ட தடுப்பூசியையும் , 20 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் மூன்றாம் கட்ட தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.

12 - 15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியை வழங்குவதற்கான ஆலோசனைகள் விசேட வைத்திய நிபுணர்கள் குழுவிடம் கோரப்பட்டுள்ளது.

அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றால் எதிர்வரும் காலங்களில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

அத்தோடு 5 - 12 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி வழங்க முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் குழுவிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம். அவர்களது ஆலோசனை கிடைக்கப் பெற்ற பின்னர் அதுகுறித்த தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

இந்நிலையில் நாட்டில் இதுவரையில் 7 இலட்சத்து 13 578 பேர் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதே வேளை அஸ்ட்ரசெனிகா முதற்கட்ட தடுப்பூசியை 1 479 631 பேரும் , 1 418 593 பேர் இரண்டாம் கட்ட தடுப்பூசியையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதே போன்று 12 017 914 பேர் சைனோபார்ம் தடுப்பூசியையும் முதற்கட்டமாகவும் , 11 088 519 பேர் இரண்டாம் கட்டமாகவும் பெற்றுக் கொண்டுள்ளனர். ஸ்புட்னிக் தடுப்பூசியை முதற்கட்டமாக 159 110 பேரும் , 155 812 பேர் இரண்டாம் கட்டமாகவும் பெற்றுக் கொண்டுள்ளனர். பைசர் தடுப்பூசியை 2 428 867 பேர் முதற்கட்டமாகவும் , 705 376 பேர் இரண்டாம் கட்டமாகவும் பெற்றுக் கொண்டுள்ளனர். மேலும் மொடர்னா தடுப்பூசியை 804 201 பேர் முதற்கட்டமாகவும் , 787 361 பேர் இரண்டாடம் கட்டமாகவும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38
news-image

2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்...

2022-11-28 19:57:39
news-image

மனித உரிமை விடயத்தில் அரசாங்கம் நழுவிச்செல்லும்...

2022-11-28 19:54:34