ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலை சந்தேகநபர் பிரிட்டனில் கைதான விவகாரம் : குற்றவாளிகளுக்கு இலங்கை தண்டிக்காவிடின் வேறு தெரிவுகள் இருப்பதைக் காண்பிக்கிறது - சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள்

Published By: Digital Desk 3

27 Feb, 2022 | 04:25 AM
image

(நா.தனுஜா)

ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரிட்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளமையானது, குற்றங்களைப்புரிந்தவர்கள் உலகின் எந்தவொரு மூலையிலும் பாதுகாப்பாக இருக்கமுடியாது என்பதையும் அத்தகைய குற்றங்களுக்கு இலங்கைபோன்ற நாடுகள் தண்டனை வழங்காவிட்டால், அதனைச் செய்வதற்கான வேறு தெரிவுகள் உள்ளன என்பதையும் காண்பிக்கின்றது என்று சர்வதேச மனித உரிமைசார் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

பி.பி.சி செய்திச்சேவையின் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரொருவர் சில தினங்களுக்கு முன்னர் பிரிட்டனின் கைதுசெய்யப்பட்ட நிலையில், அதுகுறித்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம், இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் மற்றும் சித்திரவதைகளை முடிவிற்குக்கொண்டுவரல், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைக்கோருவதற்கான அமைப்பு ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

பி.பி.சி செய்திச்சேவையின் ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனம் யாழ்ப்பாணத்தில் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கையைச் சேர்ந்த சந்தேகநபரரொருவர் பிரிட்டன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமையை நாம் வரவேற்கின்றோம். 

இந்தப் படுகொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, மெட்ரோபொலிட்டன் பொலிஸாரின் போர்க்குற்றங்கள் தொடர்பான குழுவினரால் மேற்படி 48 வயதுடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டிருப்பதுடன் அவரது பெயர் வெளியிடப்படவில்லை.

 குறித்த கைதிற்கு வழிவகுத்துள்ள செயலூக்கம் வாய்ந்த விசாரணையானது, சுமார் 22 வருடங்களுக்குப் பின்னரும்கூட நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிசெய்தல் தொடர்பில் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் கொண்டிருக்கும் ஈடுபாட்டினைக் காண்பிக்கின்றது.  

ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்பவர்கள் உலகின் எந்த மூலையிலும் பாதுகாப்பாக இருக்கமுடியாது. பி.பி.சி ஊடகவியலாளரைக் கொலைசெய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் பிரிட்டனின் மறைந்திருக்கலாம் என்பது ஏற்றுக்கொள்ளப்படமுடியாததாகும்.

கடந்த 2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனத்தின் படுகொலையானது இலங்கையில் நடைபெற்ற போரின் போதான ஊடகவியலாளர் படுகொலைகளின் இரத்தக்கறைபடிந்த ஓர் பாதையின் தொடக்கமாக அமைந்தது. இதனால் பாதிக்கப்பட்ட அநேகமானோர் தமிழர்களாகவே இருக்கின்றனர்.

குற்றங்களைப் புரிந்தவர்கள் அதற்கான தண்டனையிலிருந்து பாதுகாப்புப்பெறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதுமாத்திரமன்றி அத்தகைய குற்றங்களுக்கு இலங்கைபோன்ற நாடுகள் தண்டனை வழங்காவிட்டால், அதனைச் செய்வதற்கான வேறு தெரிவுகள் உள்ளன என்பதற்கான ஓர் அடையாளமாக ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலை வழக்குக் காணப்படுகின்றது. 

இவ்வழக்கைப் பொறுத்தமட்டில் இலங்கை அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும், பிரிட்டன் பொலிஸார் நீதியை நிலைநாட்டுவார்கள் என்று நம்புகின்றோம்.

கடந்த 2004 - 2010 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்களின் பெயர்களை ஆவணப்படுத்தியுள்ள 'இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்' என்ற அமைப்பு, இவ்விடயத்தைப் பொறுத்தமட்டில் நிமலராஜனின் வழக்கு மிகவும் முக்கியமானதாகும் என்று தெரிவித்துள்ளது.

மிகமோசமான குற்றங்களைப்புரிந்த சந்தேகநபர்களும் குற்றங்களுக்கான தண்டனைகளிலிருந்து பாதுகாப்பை அனுபவித்துவருபவர்களும், அவர்கள் எங்கிருந்தாலும் சுமார் இருதசாப்தங்களுக்குப் பின்னர்கூட தமது செயற்பாடுகளுக்குரிய சட்டரீதியான பின்விளைவுகளுக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கும். 

ஆகவே படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனுக்கான நிதிநிலைநாட்டுதல் என்பது குற்றம்புரிந்தவர்களுக்கும் மிகமோசமான குற்றச்செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் தெளிவானதொரு செய்தியைக்கூறுவதாக அமையும். 

அதேவேளை இவ்வழக்கு, போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேசக்குற்றங்கள் தொடர்பில் குற்றம்புரிந்தவர்களைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தக்கூடியவகையில் பிரிட்டனின் நீதித்துறை இருக்கின்றதா என்பதற்கான 'சோதனை வழக்காகவும்' இருக்கும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11