தனது 10 வயது மகளை தனது காதலரும் தனது மைத்துனியும்  பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொடூரமான முறையில் கொல்வதை  தாயொருவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதிர்ச்சியூட்டும்  சம்பவம் அமெரிக்க நியூ மெக்ஸிக்கோ பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில்  பிராந்திய பொலிஸார் வழங்கிய  பிந்திய தகவல்களின் அடிப்படையில் சர்வதேச ஊடகங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.

மிசெல்லி மார்ட்டின்ஸ் (35 வயது)  என்ற தாயாரே தனது மகளான விக்டோரியா  உதவி கோரிக் கதறி அழுவதையும்  பொருட்படுத்தாது  தான் இவ்வாறு  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை பொலிஸ் விசாரணைகளின் போது ஒப்புக்கொண்டுள்ளார்.

விக்டோரியா தனது 10  ஆவது பிறந்த தினத்துக்கு மறுநாள் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மிசெல்லியின் காதலரான பாபியன் கொன்ஸாலெஸ் (31  வயது) விக்டோரியாவை பாலியல்வல்லுறவுக்குட்படுத்தி கொன்றதையடுத்து  அவரும் மைத்துனியான ஜெஸிக்கா கெல்லியும் அந்த சிறுமியின் சடலத்தை துண்டு துண்டுகளாக வெட்டி போர்வையொன்றால்  சுற்றி எரித்துள்ளனர்.

இந்தப் படுகொலை இடம்பெற்று 20 நிமிடம் கழித்து மிசெல்லி தனது காதலருடன் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுள்ளமை பொலிஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஆரம்பத்தில் தனது மகளின் படுகொலையுடன் தனக்குத் தொடர்பில்லை என வாதிட்ட மிசெல்லி, தற்போது தான் அந்தக் கொடூர படுகொலையைத் தடுக்காது வேடிக்கை பார்த்ததை ஒப்புக்கொண்டுள்ளார். 

இந்நிலையில்  இந்த வழக்குத் தொடர்பான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ளது.