3 ஆவது நாளாக தொடரும் போர் ! உக்ரைனின் தலைநகரை முற்றுகையிட்டது ரஷ்யப் படை

26 Feb, 2022 | 10:04 AM
image

மூன்றாவது நாளாக உக்ரைனின் தலைநகரைக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் போரில் ஈடுபட்டுவருகின்றன.

இந்த யுத்தத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் பெரும் படைகள் உக்ரைனை முற்றுகையிட்டுள்ளது. ரஷ்ய வீரர்கள் உக்ரைனை மூன்று திசைகளிலும் சுற்றி வளைத்து தலைநகர் கீவ்வை கைப்பற்ற கடுமையான யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூன்றாவது நாளான இன்றும் போர் நீடிக்கிறது. பல இடங்களில் குண்டுகள் வெடிக்கின்றன. வானில் இருந்து குண்டு மழை பொழிவதாகவும் தொடர்ந்து துப்பாக்கி மற்றும் பீரங்கிகள் வெடிப்பதாகவும் யுத்தக்களத்தில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் தலைநகருக்கு வெளியில் 5 முதல் 50 கிலோமீற்றர் தொலைவில் இராணுவத்தைத் தடுத்து நிறுத்தி உக்ரைன் வீரர்கள் உறுதியுடன் போரை எதிர்கொண்டுள்ளனர்.

ஆயினும் மிகப்பெரிய ரஷ்யப் படை விரைவில் உக்ரைன் தலைநகரைக் கைப்பற்றக் கூடும் என்றும் கூறப்படுகிறது. ஆக்ரமிப்பாளர்கள் மீது பெற்றோல் குண்டுகளை வீசி அவர்களை அழிக்குமாறு பொதுமக்களுக்கு உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் 1000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. 

கீவ் அருகில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் விமான நிலையத்தை ரஷ்யப் படை கைப்பற்றியது.

இதில் நடைபெற்ற மோதலில் 200 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த போரில் 25 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும் பலநூறு பேர் காயம் அடைந்திருப்பதாகவும் ஐ.நா.சபை அறிவித்துள்ளது.

போர் உக்கிரம் அடைந்த நிலையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக புலம் பெயர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதனிடையே கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைனின் பாம்பு தீவில் உக்ரைன் இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

அப்போது, அப்பகுதிக்கு வந்த ரஷ்ய போர் கப்பலின் கேப்டன் தீவில் உள்ள உக்ரைன் வீரர்களிடம் ஆயுதங்களை கைவிட்டுவிட்டு சரணடையுமாறு கூறினார். இதற்கு மறுத்ததால் அவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோத ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை...

2022-12-02 16:51:35
news-image

கடுமையான கொவிட்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கைவிடுகின்றதா சீனா?

2022-12-02 16:06:09
news-image

யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக புட்டினை சந்திக்க...

2022-12-02 15:22:57
news-image

தென் ஆபிரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம்: பொறியியல்...

2022-12-02 14:46:27
news-image

புலம்பெயர்ந்தவர்களால் இந்தியாவுக்கு இவ்வருடம் 100 பில்லியன்...

2022-12-02 13:20:58
news-image

இந்திய கடலோர காவல்படையில் நவீன எம்.கே.3...

2022-12-02 12:50:38
news-image

ஜனநாயகம் பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்கத்...

2022-12-02 12:46:26
news-image

ஐஎஸ் அமைப்பின் நெய்ல் பிரகாஸ் துருக்கியிலிருந்து...

2022-12-02 12:17:51
news-image

13,000 யுக்ரைன் படையினர் பலி :...

2022-12-02 13:45:14
news-image

பிரேஸில் மண்சரிவில் இருவர் பலி, 30...

2022-12-02 09:23:11
news-image

“ராவணன், ராட்சசன், ஹிட்லர்... என்னை விமர்சிப்பதில்...

2022-12-01 17:06:54
news-image

இந்தியாவின் கதையை பகிர ஜி-20 தலைமை...

2022-12-01 16:39:10