ரஷ்யா - உக்ரைன் போரின் தற்போதைய நிலைவரம் ! பேச்சுவார்த்தைக்கு தயாரென ரஷ்யா அறிவிப்பு

25 Feb, 2022 | 10:20 PM
image

உக்ரைன் இராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Kyiv was ablaze in the early hours of Friday as the city came under attack from Russia. Ukrainian Interior Ministry adviser Anton Gerashenko shared footage on social media of a blaze in what he said was the Darnitsky district of Kyiv, in the southeast of the city on the left bank of the Dnipro river

உக்ரைனுடன் 2 ஆவது நாளாக ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வரும் நிலையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

அடக்குமுறையில் இருந்து உக்ரைன் மீட்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் எனவும் ரஷ்ய அமைச்சர் செர்ஜி லாவ்ரேவ் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை 2 ஆவது நாளாகவும் மேற்கொண்டு வருகின்றன.

On social media, images of bridges blown up by Ukrainian troops were shared. This image was captioned: 'Departure to the capital via the Novoirpen route is not available The Armed Forces blew up a bridge in Romanivka to prevent the occupiers' tanks from entering Kyiv'

வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 

உக்ரைனின்  ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. 

Smoldering wreckage of a Russian jet is seen in Kyiv on Friday morning

அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. 

இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் அங்கு நிலவி வருகின்றது.  உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. 

A Russian plane crashed near Voronezh on Thursday in what is believed to have been a technical failure. All those on board perished - it is unclear how many

கிவ்வில் இருந்து 3 மைல் தொலைவில் ரஷ்ய படைகள் முன்னேறி வருவதாகவும் உக்ரைன் இராணுவம்  தெரிவித்துள்ளது.  

ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், மக்களைப் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு உக்ரைன் அரசு வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, ரஷ்யா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Ukrainian security forces accompany a wounded man after an airstrike hit an apartment complex in Chuhuiv, Kharkiv

உக்ரைனில் ரஷ்ய படைகளுக்கு பயந்து பாதாளத்திற்குள்ளும், சுரங்கப்பாதைகளுக்குள்ளும் மக்கள் பதுங்கியுள்ள நிலையில்,  அண்டை நாடுகளில் தஞ்சமடைவதோடு, பதுங்கு குழிகளுக்குள் பதுங்கி வருகின்றனர்.

People use a basement of a school as a shelter for the next night in Kyiv

இந்த நிலையில், இருள் மூழ்கிய அந்த சுரங்கப்பாதைகளுக்குள் உணவு, தண்ணீர் இன்றி பதுங்கியிருக்கும் மக்கள், செல்போன் டார்ச் மூலம் ஒளியேற்றி, இசைக்கருவிகளை இசைத்து பாட்டு பாடி ஒருவருக்கொருவர் ஆறுதலாக பொழுதை கழித்து வருகின்றனர்.

Ukrainian servicemen get ready to repel an attack in Ukraine's Lugansk

ரஷ்ய படைகள் செர்னோபிலில் உள்ள அணு ஆலையை கைப்பற்ற முயல்வதாகவும், இது ஒட்டுமொத்த ஐரோப்பாவிற்கும் எதிரான போர்ப் பிரகடனம் என்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

May be an image of 3 people, child, people sitting, people standing and outdoors

போரின் போது ரஷ்ய தரப்பில் ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Ukrainian servicemen get ready to repel an attack in Ukraine's Lugansk region

புடின் உக்ரைன் மீது போர் தொடுத்திருப்பதை அந்நாட்டு சிறையில் இருக்கும் எதிர்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி கடுமையாக எதிர்த்துள்ளார்.

புடின் ஆட்சியின் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்கவே உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

உக்ரைன் அரசு பதிலடி கொடுக்க18 ஆயிரம் இயந்திர துப்பாக்கிகளை தன்னார்வ தொண்டர்களுக்கு வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் பிரபல நடிகை காஸியானி பிணையில்...

2022-11-28 16:37:26
news-image

ரஷ்யா - உக்ரைன்  போரில் குளிா்காலம்,...

2022-11-28 17:01:08
news-image

துபாய், ஐரோப்பாவில் 30 தொன் போதைப்பொருள்...

2022-11-28 16:16:13
news-image

கணவனைக் கொலைசெய்து 22 துண்டுகளாக வெட்டி...

2022-11-28 15:04:43
news-image

சோமாலிய ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் படையினர் மோதல்:...

2022-11-28 13:14:47
news-image

பெண்கள் ஆடை பற்றிய கருத்தால் சர்ச்சை:...

2022-11-28 12:42:05
news-image

இந்தியா - பூடான் இணைந்து உருவாக்கிய...

2022-11-28 13:40:27
news-image

பாப்பரசருடனான தொலைபேசி உரையாடலை இரகசியமாக பதிவுசெய்த...

2022-11-28 12:26:34
news-image

மும்பைத் தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன்...

2022-11-28 12:16:33
news-image

மின் கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய...

2022-11-28 10:35:31
news-image

கொவிட் ஊரடங்கிற்கு எதிராக சீனாவில் போராட்டம்...

2022-11-28 09:59:28
news-image

கெமரூனில் மண்சரிவு : 14 பேர்...

2022-11-28 08:45:21