ஆப்கானுக்கு முதல் கட்டமாக 2,500 தொன் கோதுமையை அனுப்பியது இந்தியா

25 Feb, 2022 | 05:21 PM
image

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அங்கு மக்கள் வாழ்வதற்கான சூழல் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. 

இது உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது இந்நிலையில் இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது. 

அந்த வகையில் கடந்த மாதம் 1-ம் திகதி 1.6 தொன் அளவிலான உயிர்காக்கும் மருந்துகளை விமானம் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது. 

அதன் தொடர்ச்சியாக 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளும் வழங்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானுக்கு 2 தொன் அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகளை கொண்ட 3 ஆவது தொகுதி மருத்துவ உதவியை இந்தியா வழங்கியது. 

இதற்கிடையே, பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு 50 ஆயிரம் டொன் கோதுமையை அடுத்த வாரம் இந்தியா அனுப்ப உள்ளது என அந்நாட்டு தூதுவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு முதல் கட்டமாக 2,500 தொன் கோதுமையை 50 லாரிகள் மூலம் பாகிஸ்தான் வழியாக காபூலுக்கு அனுப்பி வைத்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்பட்டுள்ள சூழ்நிலை உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 

தசாப்தத்தின் மோசமான வறட்சி காரணமாக இங்கு கோதுமை பயிரின் கால் பகுதி சேதமடைந்துவிட்டது, கூடவே 2 கோடியே 30 லட்சம் மக்கள் கடுமையான குளிர்காலத்தில் பட்டினிப் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர்.

மறுபுறம் இங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் மேற்கத்திய நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் நிதியுதவி நின்றுவிட்டதால் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகி அரசு ஊழியர்களின் ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பட்டினியின் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பல்வேறு கட்டங்களில் உணவு மற்றும் மருந்து வகைகள் என பல உதவிகளை இந்தியா செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right