கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 314 பேர் குணமடைவு

By Vishnu

25 Feb, 2022 | 03:26 PM
image

கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 314 நபர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதனால் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்த நோயாளர்களது எண்ணிக்கை 608,226 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 17,444 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம் மொத்தமாக இலங்கையில் 06 லட்சத்து 41 ஆயிரத்து 786 கொரோனா நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 16,116 உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right