(நா.தனுஜா)
உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் சட்டவிரோத நடவடிக்கையை ஆதரிக்க வேண்டாம் என்றும் ஏனைய நாடுகள் இதனைப் பின்பற்றுவதை ஊக்குவிக்க வேண்டாம் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளது.
உக்ரேன் மீது ரஷ்யாவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள முழு அளவிலான படையெடுப்பிற்கு சர்வதேச நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பொது கட்டமைப்புக்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுவரும் நிலையில், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ரோமானியா ஆகிய நாடுகளின் தூதரகங்களின் இணக்கப்பாட்டுடன் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரேனின் மீது ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையானது ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச உடன்படிக்கைகளை முற்றுமுழுதாக மீறுகின்ற செயலாகும்.
அதனூடாக எந்தவொரு நாட்டினதும் இறையாண்மை அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராகப் படையெடுப்பை மேற்கொள்வதோ அல்லது அச்சுறுத்தலைப் பிரயோகிப்பதோ தடைசெய்யப்பட்டுள்ளது.
பிரச்சினையை அமைதியான முறையில் தீர்ப்பதற்காக இராஜதந்திர ரீதியில் முன்னெடுக்கப்படும் நகர்வுகளுக்கு இந்த இராணுவ நடவடிக்கை பாரியதொரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நெருக்கடிக்கான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு நாம் பல வருடகாலமாக முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றோம். இருப்பினும் நேட்டோ அமைப்பின் ஊடாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ரஷ்யா ஏற்றுக்கொள்ளாதது குறித்துக் கவலையடைகின்றோம்.
ரஷ்யா உக்ரேனின் இறையாண்மையைப் புறக்கணிப்பதுடன் மாத்திரமன்றி, அதன் இருப்பிற்கான உரிமையையும் கேள்விக்குட்படுத்துகின்றது. இந்த நடவடிக்கையானது இந்திய - பசுபிக் பிராந்தியம் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த உலகிலும் நாமனைவரும் இணைந்து ஏற்படுத்தியுள்ள சர்வதேச சட்டங்களுக்கு அமைவான ஒழுங்குகளுக்கு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஒட்டுமொத்த உலகத்தினதும் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கக்கூடிய இந்த மிகமோசமான நடவடிக்கையை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவருமாறு சர்வதேச சமூகம் ரஷ்யாவை வலியுறுத்தவேண்டும்.
அதேவேளை ரஷ்யாவின் இந்த சட்டவிரோத தீர்மானத்தை ஆதரிக்கவேண்டாம் என்றும் ஏனைய நாடுகள் இதனைப் பின்பற்றுவதை ஊக்குவிக்கவேண்டாம் என்றும் இலங்கையிடம் வலியுறுத்துகின்றோம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM