முதல் நாள் போர் வெற்றிகரமானது - ரஷ்யா : போரை நிறுத்துமாறு ஐ.நா.கோரிக்கை

25 Feb, 2022 | 12:57 PM
image

உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா நேற்று முதல் ஆரம்பித்துள்ள நிலையில், முதல் நாள் போர் வெற்றிகரமானது என்று ரஷ்யா அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் முதல் நாளில் 11 விமான நிலையங்கள் உட்பட 74 இராணுவ கட்டமைப்புகள் செயலிழக்கச்செய்யப்பட்டுள்ளன. 

இதன் மூலம் 'முதல்நாள் போர் வெற்றிகரமாக அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இருபத்தோராம் நூற்றாண்டிலும் போரின் தாக்கத்தால் படைவீரர்களும், மக்களும் கொன்று குவிக்கப்படுவது ஒட்டுமொத்த மனித குலத்துக்கே மாபெரும் சவாலாக அமைந்துள்ளது எனவும் அதனால் ரஷ்யா போரை நிறுத்தி, தூதரக ரீதியில் சமாதானத் தீர்வை நாட வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் கேட்டுக்கொண்டுள்ளன.

இதேவேளை உக்ரைன் போர், தன்னுடைய பதவிக்காலத்தில் சோகமான தருணம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூட்டத்தில் பங்கேற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர்,

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக நான் பதவி வகிக்கும் காலத்தில் இச் சம்பவம் மிகவும் சோகமான தருணமாக கருதுகின்றேன் .

நான் இந்த பாதுகாப்பு சபை கூட்டத்தின் ஆரம்பத்தில், ரஷ்ய ஜனாதிபதி புட்டினை நோக்கி, எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து கூறுகிறேன். 

உக்ரைன் மீதான படையெடுப்பில் இருந்து உங்கள் படைகளை நிறுத்துங்கள், ஏராளமானவர்கள் இறந்திருக்கிறார்கள் சமாதானத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.

ஆனால் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே, டொன்பாஸில் ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கையை ஜனாதிபதி புட்டின் அறிவித்து விட்டார். 

உக்ரைன் படைகள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

மனித நேயத்தின் அடிப்படையில் தங்கள் படைகளை மீண்டும் ரஷ்யாவுக்கு ஜனாதிபதி புட்டின் திரும்ப அழைக்க வேண்டும். 

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே மிக மோசமான போரை ஐரோப்பாவில் தொடங்க அனுமதிக்காதீர்கள். 

இந்தப் போரின் விளைவுகள் உக்ரைனுக்கு மட்டுமல்ல, ரஷ்ய கூட்டமைப்புக்கு மட்டுமல்ல, முழு உலகத்துக்கும் பேரழிவை ஏற்படுத்தி விடும்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து நாம் மீண்டு வருகின்ற தருணத்தில், இந்தப் போரினால் உலகப்பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளை நாம் முன்கூட்டியே கணிக்க முடியாது.

வளரும் நாடுகள் பலவும் மீண்டு வருவதற்கு இடம்கொடுக்க வேண்டும். இது மிக மிக கடினமானது. எண்ணெய் விலைகளின் ஏற்றம், உக்ரைனில் இருந்து கோதுமை ஏற்றுமதி நிறுத்தம், சர்வதேச சந்தைகளில் உறுதியற்ற தன்மையால் ஏற்படும் வட்டி விகிதங்கள் மாற்றம் ஆகியவை மிக கடினமானதாக இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோத ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை...

2022-12-02 16:51:35
news-image

கடுமையான கொவிட்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கைவிடுகின்றதா சீனா?

2022-12-02 16:06:09
news-image

யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக புட்டினை சந்திக்க...

2022-12-02 15:22:57
news-image

தென் ஆபிரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம்: பொறியியல்...

2022-12-02 14:46:27
news-image

புலம்பெயர்ந்தவர்களால் இந்தியாவுக்கு இவ்வருடம் 100 பில்லியன்...

2022-12-02 13:20:58
news-image

இந்திய கடலோர காவல்படையில் நவீன எம்.கே.3...

2022-12-02 12:50:38
news-image

ஜனநாயகம் பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்கத்...

2022-12-02 12:46:26
news-image

ஐஎஸ் அமைப்பின் நெய்ல் பிரகாஸ் துருக்கியிலிருந்து...

2022-12-02 12:17:51
news-image

13,000 யுக்ரைன் படையினர் பலி :...

2022-12-02 13:45:14
news-image

பிரேஸில் மண்சரிவில் இருவர் பலி, 30...

2022-12-02 09:23:11
news-image

“ராவணன், ராட்சசன், ஹிட்லர்... என்னை விமர்சிப்பதில்...

2022-12-01 17:06:54
news-image

இந்தியாவின் கதையை பகிர ஜி-20 தலைமை...

2022-12-01 16:39:10