மட்டு வாகரையில் தீயில் எரிந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு 

By T Yuwaraj

25 Feb, 2022 | 11:50 AM
image

மட்டக்களப்பு வாகரையில் வீடு ஒன்றில் 64 வயதுடைய பெண் ஒருவர் தீயில் எரிந்து உயிரிழந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை சடலலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். 

நாகபுரம்  பால்சேனையைச் சேர்ந்த 64 வயதுடைய பூமணதேவி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் சம்பவதினமான நேற்று இரவு குப்பி விளக்கு ஒன்றை எரியவைத்துவிட்டு அதற்கு அருகில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த போது குப்பிவிளக்கின் தீ அவர் மீது வீழ்ந்தன் காரணமாக அவர் தீபற்றி எரிந்து உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்த வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்காக நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right