சர்வதேச குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க இன்று ஜெனிவா செல்கிறது இலங்கை குழு
(ச.லியோ நிரோஷ தர்ஷன்)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழு இன்று 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜெனிவா செல்கிறது.
மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் 28 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டு ஏப்ரல் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
இந்த நிலையில் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கை 3 ஆம் திகதி வியாழக்கிழமை பேரவையில் சமர்பிக்கப்பட உள்ளது.
இதற்கான பதிலளிப்பை அன்றைய தினமே இலங்கை முன்வைக்க தீர்மானித்தள்ளது.
எவ்வாறாயினும் இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் மற்றுமொரு தீர்மானத்தை கொண்டுவருவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தீர்மானமானது இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கான பொறுப்புக்கூறலின் தாமத நிலை மற்றும் அண்மைய கால உரிமைகள் மீறல்கள் உள்ளடக்கியதாக இருக்கும் என கொழும்பு இராஜதந்திர மட்ட தகவல்கள் குறிப்பிடுகின்றன.
பிரித்தானியா கொண்டு வரவுள்ள இந்த புதிய தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலவும் மேற்குலக நாடுகள் சிலவும் ஆதரவை தெரிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் குறிப்பிடுகின்றன.
இவ்வாறானதொரு நிலையில் ஜெனிவாவில் ஏற்பட கூடிய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றது.
குறிப்பாக எந்தவொரு நாட்டையும் பகைத்துக்கொள்ளாது அந்நாடுகளின் ஒத்துழைப்புகளுடன் நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் ஜெனிவா சவால்களை வெற்றிக்கொள்வது அரசாங்கத்தின் நோக்கமாகியுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ள ஜெனிவா கூட்டத்தொடரின் உண்மை நிலையையும் இலங்கைக்கு ஏற்பட கூடிய பாதகமான நிலைமை குறித்தும் அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய அவற்றை எதிர்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட இலங்கை இராஜதந்திர குழுவிற்கு ஜனாதிபதி ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.
மறுபுறம் இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் இம்முறை சமர்பிக்கப்பட உள்ள தீர்மானத்தின் வரைபும் அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதனை எதிர்க்கொள்வதற்கும் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு பதிலளிப்பதற்கும் இன்று ஜெனிவா செல்கின்ற வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
-------------------------------------------------------------------------------------------------------------
பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் உறுதிசெய்வதற்கான செயற்திட்டத்தை தற்போதைய அரசாங்கம் முன்வைக்கவில்லை - மிச்சேல் பச்லெட்
(நா.தனுஜா)
இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் சர்வதேச குற்றங்கள் மற்றும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கும் செயற்திறன்மிக்க நிலைமாறுகால நீதிப்பொறிமுறையை முன்னெடுப்பதற்கும் தவறியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட், தற்போதைய அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து விலகி இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில்,
மேலும் https://www.virakesari.lk/article/123145
---------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கை அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவேண்டிய 11 முக்கிய பரிந்துரைகள்
(நா.தனுஜா)
இலங்கை அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவேண்டிய 11 முக்கிய பரிந்துரைகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டின் இலங்கை தொடர்பான 17 பக்க அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலும் https://www.virakesari.lk/article/123155
----------------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------
தமிழர்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுப்பதற்கு பொது ஜனவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் : 5 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடிதம்
(நா.தனுஜா)
சிவில் சமூக இடைவெளியையும் சுயாதீனமானதும் அனைவரையும் உள்ளடக்கிய கட்டமைப்புக்களையும் உறுதிசெய்வதுடன் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவிற்குக்கொண்டுவருவதன் ஊடாக மாத்திரமே இலங்கையினால் நிலைபேறான அபிவிருத்தியையும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடைந்துகொள்ளமுடியும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் ஊடகப்பேச்சாளர் ரவினா ஷம்டசனி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் https://www.virakesari.lk/article/123347
------------------------------------------------------------------------------------------------------------------------
ரஞ்சனின் விடுதலைக்காக ஜெனீவா சென்றனர் மனுஷ மற்றும் ஹரீன்
(நா.தனுஜா)
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடளிக்கும் நோக்கில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை (1) அதிகாலை ஜெனீவாவிற்குப் பயணமானார்கள்.
மேலும் https://www.virakesari.lk/article/123339
-----------------------------------------------------------------------------------------------------------------------
காணாமலாக்கப்பட்டமைக்கான காரணகர்த்தாக்களாக பாதுகாப்புத்தரப்பினரும் உள்வாங்கப்படும் வகையில் எமது அலுவலகச்சட்டம் திருத்தியமைக்கப்படவேண்டும் - மகேஷ் கட்டுலந்த
(நா.தனுஜா)
காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் பெருமளவானவை இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் அல்லது பாதுகாப்புத்தரப்பினரால் அழைத்துச்செல்லப்பட்டவர்களுடன் தொடர்புடையவையாகக் காணப்படுகின்றன.
மேலும் https://www.virakesari.lk/article/123346
------------------------------------------------------------------------------------------------------------------------
மனித உரிமைகள் பேரவையின் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையை முழுமையாக நிராகரிப்பதாக ஜீ.எல்.பீரிஸ் அறிவிப்பு
(நா.தனுஜா)
இலங்கையின் உடன்பாடின்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தின் ஊடாக உருவாக்கப்பட்டுள்ள ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையானது இலங்கை மக்களுக்கு எவ்வகையிலும் பயனளிக்காது என்பதுடன் அது சமூகங்களுக்கு இடையில் பிளவுகள் ஏற்படுவதற்கும் துருவமயப்படுவதற்கும் வழிவகுக்கும்.
மேலும் https://www.virakesari.lk/article/123357
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பம்
--------------------------------------------------------------------------------------------------------------------------
காணாமல்போனோரின் குடும்பங்கள் தொடர்பில் பச்செலட் விசேட அவதானம் - உயர்ஸ்தானிகரின் பேச்சாளர் கருத்து
(நா.தனுஜா)
சிவில் சமூக இடைவெளியையும் சுயாதீனமானதும் அனைவரையும் உள்ளடக்கிய கட்டமைப்புக்களையும் உறுதிசெய்வதுடன் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவிற்குக்கொண்டுவருவதன் ஊடாக மாத்திரமே இலங்கையினால் நிலைபேறான அபிவிருத்தியையும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடைந்துகொள்ளமுடியும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் ஊடகப்பேச்சாளர் ரவினா ஷம்டசனி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் https://www.virakesari.lk/article/123371
-----------------------------------------------------------------------------------------------------------
ஜெனீவாவில் அமைச்சர் பீரிஸ் தலைமையிலான குழு பொதுநலவாய அமைப்பு உள்ளிட்ட தரப்பினருடன் முக்கிய சந்திப்பு
(எம்.மனோசித்ரா)
மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடரின் உயர்மட்ட அமர்வின் பக்க அம்சமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இலங்கை பிரதிநிதிகள் ஐக்கிய இராச்சிய பொதுநலவாய செயலகம், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் உலக புலமை சொத்து அமைப்பு ஆகியவற்றுடன் இருதரப்பு சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் https://www.virakesari.lk/article/123424
---------------------------------------------------------------------------------------------------------------------------
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்த உரிய தரப்பிற்கு அழுத்தம் பிரயோகியுங்கள் - பேராயர் கோரிக்கை
(எம்.மனோசித்ரா)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவது குறித்து உரிய தரப்பினருக்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் https://www.virakesari.lk/article/123441
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பயன்பாட்டை இலங்கை அரசாங்கம் உடனடியாக இடைநிறுத்த வேண்டும் - ஐ.நா. வலியுறுத்தல்
(நா.தனுஜா)
பயங்கரவாத்தடைச்சட்டத்தின்கீழ் தன்னிச்சையாகத் தடுத்துவைக்கப்படக்கூடிய நபர்கள், குறிப்பாக இன மற்றும் மதரீதியான சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதுடன் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கான இடைவெளி சுருக்கமடையக்கூடிய சாத்தியமும் உள்ளது.
மேலும் https://www.virakesari.lk/article/123473
-----------------------------------------------------------------------------------------------------------------------------
நாட்டில் நீதியைக்கோருபவர்களே பயங்கரவாதிகளாக நோக்கப்படுகின்றனர் - ஐ.நா. வின் கிளைக்கூட்டத்தொடரில் ஹரீன்
(தனுஜா)
இன்றளவில் இலங்கையைப் பொறுத்தமட்டில் கிறிஸ்தவ தேவாலயங்களில் குண்டை வெடிக்கச்செய்து பெருமளவான உயிர்கள் பலியாவதற்குக் காரணமானவர்களின் செயற்பாடு தீவிரவாதமாக நோக்கப்படவில்லை.
மேலும் https://www.virakesari.lk/article/123481
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
உயர் ஸ்தானிகர் பச்லேட் இலங்கை வரவேண்டும் - இலங்கை தூதுக்குழு அழைப்பு
(ஆர்.யசி)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மிட்செல் பச்லேட் இலங்கைக்கு வருகை தரவேண்டும் எனவும், இலங்கையின் உண்மையான நிலைமை என்ன என்பதையும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் எவ்வாறு ஒற்றுமையாக வாழ்கின்றனர் என்பதை நேரடியாக அறிந்துகொள்ள வேண்டும் எனவும் வெளிவிவகாரதுறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தலைமையிலான இலங்கை தூதுக்குழு வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் https://www.virakesari.lk/article/123523
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்தான இன்று விவாதம் இன்று
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைப்பெற்று வருகின்ற நிலையில் இன்று வெள்ளிக்கிழமை இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவிருக்கின்றது.
மேலும் https://www.virakesari.lk/article/123563
---------------------------------------------------------------------------------------------------------------------------------
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை இலங்கை அரசாங்கம் பாதுகாக்கின்றது - மனித உரிமைகள் கண்காணிப்பகம்
(நா.தனுஜா)
இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களைப் பாதுகாப்பதுடன் சட்டத்தின் ஆட்சியைப் புறக்கணித்துச் செயற்பட்டுவரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கையின் சர்வதேச பங்காளிகளும் கடந்தகால மீறல்களுக்கான நீதிநாட்டப்படுவதற்கும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதற்குமான அழுத்தங்களைத் தொடர்ந்து வழங்குவார்கள் என்று பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள்.
மேலும் https://www.virakesari.lk/article/123550
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பொறுப்புக்கூறல், நல்லிணக்க செயற்பாடுகளில் இலங்கை பின்னடைவு : குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படாத கலாசாரம் நீடிக்கிறது - ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பச்லெட் கவலை
இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சர்வதேச உபாய முறைகளை தொடர்ச்சியாக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்தார்.
மேலும் https://www.virakesari.lk/article/123579
-------------------------------------------------------------------------------------------------------------------------------
போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய இராணுவத்தினருக்கு உயர்பதவிகள் ; பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய அரசாங்கம் தயாரில்லை என்பது புலப்படுகிறது - பச்லெட் கவலை
(நா.தனுஜா)
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு ஏற்றவகையில் அனைவரையும் உள்ளடக்கிய உள்ளகப்பொறிமுறையொன்றை உருவாக்குவதாக இலங்கை அரசாங்கம் இந்தப் பேரவையின் முன்நிலையில் வாக்குறுதியளித்து இருவருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னமும் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் என்பவற்றின் ஊடாக நிலைமாறுகால நீதியை அடைந்துகொள்வதற்கான நம்பத்தகுந்த செயற்திட்டம் எதனையும் அரசாங்கம் சமர்ப்பிக்கவில்லை.
மேலும் https://www.virakesari.lk/article/123603
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
'ஒரே நாடு, ஒரே சட்டம்' - இலங்கையின் பல்லின சமூகக்கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது - இந்தியாவின் பிரதிநிதி பேரவையில் வலியுறுத்தல்
(நா.தனுஜா)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 46/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் மனித உரிமைகள், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் நிலைவரத்தை மேம்படுத்துவதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்தினால் வரையறுக்கப்பட்டளவிலான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச நாடுகள், 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணி இலங்கையின் பன்முகத்தன்மை வாய்ந்த சமூகக்கட்டமைப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும் விசனம் வெளியிட்டுள்ளன.
மேலும் https://www.virakesari.lk/article/123614
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகர் பச்லெட்டின் அறிக்கை பாரிய குறைபாடுகளைக் கொண்டுள்ளது - ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பீரிஸ் தெரிவிப்பு
(நா.தனுஜா)
இலங்கை தொடர்பில் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன.
மூன்று தேர்தல்களின் மக்களின் ஆணையைப்பெற்று தேர்வான அரசாங்கத்தின் அடிப்படை செயற்பாடுகள் மற்றும் அதன் கடப்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவாறான ஊடுருவல் போக்கிலான தன்மையே அதன் பிரதான குறைபாடு என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் https://www.virakesari.lk/article/123612
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
உள்ளகப் பொறிமுறையில் பிரச்சினைகளை தீர்ப்போம் - நீதி அமைச்சர் சப்றி
(ஆர்.ராம்)
இலங்கையர்களுக்குள் காணப்படும் பிரச்சினைகளை உள்ளகப் பொறிமுறையில் தீர்த்துக்கொள்வதற்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையார் உட்பட ஐ.நா.மனித உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச சமூகத்தினர், புலம்பெயர் தரப்பினர்உள்ளிட்டவர்களிடத்தில் எடுத்துரைத்துள்ளோம் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஜெனிவாவில் இருந்து வீரகேசரியிடம் தெரிவித்தார்.
மேலும் https://www.virakesari.lk/article/123631
-------------------------------------------------------------------------------------------------------------------------------
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உயர்ஸ்தானிகர் பச்லெட்டின் அறிக்கைக்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் வரவேற்பு
(நா.தனுஜா)
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதை முன்னிறுத்தி மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் வரவேற்கத்தக்கவையாகும்.
மேலும் https://www.virakesari.lk/article/123634
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜெனீவாவில் பல்வேறு இராஜதந்திரிகளுடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சந்திப்பு
(எம்.மனோசித்ரா)
ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரின் பக்க அம்சமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்கா , ஐக்கிய இராச்சியம் மற்றும் ஈரான் உள்ளிட்டவற்றின் நிரந்தர பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மேலும் https://www.virakesari.lk/article/123641
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
நீதி கிடைக்க ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தலையிட வேண்டும் - பேராயர்
(எம்.மனோசித்ரா)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சாட்சிகளை ஒன்று திரட்டும் செயற்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கும் , குறித்த தாக்குதல்களின் பிண்ணனியில் காணப்படும் உண்மைகள் தொடர்பில் ஆராய்வதற்கு பக்கசார்பற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நடைமுறையொன்றை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பேராயர் மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் https://www.virakesari.lk/article/123714
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இலங்கை குறித்து தீவிர கரிசனை
(நா.தனுஜா)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் குறித்து தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருப்பதுடன் சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், காணாமல்போனோரின் குடும்பத்தினர் மீதான அடக்குமுறைகள் முடிவிற்குக்கொண்டுவரப்படவேண்டும் என்றும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகம் உடனடியாக இடைநிறுத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றன.
மேலும் https://www.virakesari.lk/article/123715
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
பொலிஸ்காவலின்கீழ் இடம்பெற்ற மரணங்கள் தொடர்பில் உரியவாறான விசாரணைகள் அவசியம் - அம்பிகா சற்குணநாதன்
(நா.தனுஜா)
நாட்டில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் இராணுவமயப்படுத்தப்படுவது குறித்தும், போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டு பொலிஸ்காவலின்கீழ் வைக்கப்பட்டிருந்த நபர்கள் உயிரிழக்கும் விதம் குறித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் கரிசனைகளை வெளிப்படுத்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், தடுப்புக்காவலின்கீழ் இடம்பெற்ற மரணங்கள் குறித்து போதிய விசாரணைகள் மேற்கொள்ளப்படாமையானது தண்டனைகளிலிருந்து விலக்களிக்கும் போக்கு தொடர்வதையும் அரசகட்டமைப்புக்களால் வன்முறை கையாளப்படுவதையும் காண்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் https://www.virakesari.lk/article/123733
-------------------------------------------------------------------------------------------------------------------------
முன்னெப்போதுமில்லாத வகையில் இலங்கை மக்களின் மனித உரிமைகள் மிகுந்த அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன - ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஹரீன் விசனம்
(நா.தனுஜா)
உயிர்த்த ஞாயிறுதினப்பயங்கரவாதத்தாக்குதல் விவகாரத்தில் அலட்சியமாக செயற்பட்ட அதிகாரிகளின்மீது வழக்குப்பதிவு செய்யப்படாமையானது, தாக்குதலின் பின்னணியிலுள்ள உண்மையான சூத்திரதாரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுகின்றதா? என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.
மேலும் https://www.virakesari.lk/article/123734
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
வடக்கு, கிழக்கில் சிறுபான்மையினர் மக்கள் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர் - ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பிரிட்டன்
(நா.தனுஜா)
இலங்கையில் மனித உரிமைகளுடன் தொடர்புடைய மிகமுக்கிய வழக்குகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய பின்னடைவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கரிசனையை வெளிப்படுத்திய பிரிட்டன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகரித்துவரும் காணி அபகரிப்புச்சம்பவங்கள் உள்ளடங்கலாக சிறுபான்மையின மக்கள் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு முகங்கொடுத்துவருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் https://www.virakesari.lk/article/123735
----------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ், முஸ்லிம் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுங்கள் - அமெரிக்கா வலியுறுத்தல்
(நா.தனுஜா)
இலங்கையில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய அரசியல் தீர்வொன்றை அடைந்துகொள்வதை முன்னிறுத்தி, அரசாங்கம் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளுடனும் சிவில் சமூக அமைப்புக்களுடனும் ஒன்றிணைந்து செயற்படவேண்டியது அவசியமாகும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
மேலும் https://www.virakesari.lk/article/123740
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதற்கான ஆயுதமாக மனித உரிமைகளைப் பயன்படுத்தவேண்டாம் - சீனா வலியுறுத்தல்
(நா.தனுஜா)
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதற்கான ஓர் ஆயுதமாக மனித உரிமைகளைப் பயன்படுத்துவதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்று சீனா பேரவையில் வலியுறுத்தியுள்ளது.
மேலும் https://www.virakesari.lk/article/123744
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜெனிவாவில் 31 நாடுகள் இலங்கைக்கு சாதகமாக உள்ளன - அரசாங்கம்
(எம்.மனோசித்ரா)
இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31 அங்கத்துவ நாடுகள் சாதகமாகவே நோக்கியுள்ளன.
மேலும் https://www.virakesari.lk/article/123771
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரிட்டன் அரசாங்கம் தடைவிதிக்கவேண்டும் - விரேந்திர ஷர்மா
(நா.தனுஜா)
இலங்கையின் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரின்போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்காவைப் பின்பற்றி பிரிட்டன் அரசாங்கமும் தடைவிதிக்கவேண்டும் என்று அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் விரேந்திர ஷர்மா வலியுறுத்தியுள்ளார்.
மேலும் https://www.virakesari.lk/article/123761
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM