(எம்.எம்.மின்ஹாஜ்)

நல்லாட்சி அரசாங்கம் இராணுவ வீரர்களின் மீது அக்கறையின்றி செயற்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது. முன்னைய ஆட்சியை விடவும் இராணுவ வீரர்களின் கெளரவத்தை பாதுகாப்பதற்காக நாம் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒய்வுபெற்றுள்ள இராணுவ வீராகளின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒய்வூ பெற்ற இராணுவ வீராகள் 50 பேரிற்கு தொழில்நுட்ப உத்தியோகத்தர்களாக நியமனம் வழங்கும் வைபவம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.