கிளிநொச்சி பளை ஏ 9 வீதியில்  இன்று (24-02-2022) இரவு 7-30 மணியாளவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதியின் முல்லையடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் வீதியில் மாடு குறுக்கே சென்றதால் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.

 இந்த விபத்தின் போது படுகாயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள முன்னெடுத்துள்ளனர்.