சஹ்ரானின் மனைவி ஹாதியாவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Published By: Digital Desk 4

24 Feb, 2022 | 10:31 PM
image

( எம்.எப்.எம்.பசீர்)

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதலின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹஷீமின்,  மனைவிக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின்  கீழ்  சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் மே 27 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கல்முனை மேல் நீதிமன்ற  நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் குறித்த வழக்கு  வியாழக்கிழமை (24) விசாரணைக்கு வந்தபோதே, மே 27 வரை வழக்கானது ஒத்தி வைக்கப்பட்டது.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது  சஹ்ரான் ஹஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா  பலத்த பாதுகாப்புடன்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

இந் நிலையில் அவர் சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி, பிரதிவாதிக்கு எதிரான சான்றாக முன் வைக்கப்படும் அவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சிங்கள மொழியில் உள்ளதால்,  அதன் தமிழ்  மொழிபெயர்ப்பு அவசியம் என மன்றில் சுட்டிக்காட்டினார்.

குற்றப்பத்திரத்தின் இணைப்பு ஆவணங்கள் சிங்கள மொழியில் காணப்படுவதால் அவை தமிழ் மொழியில் மொழி பெயர்க்கபப்டல் வேண்டும் எனவும், அப்போதே பிரதிவாதிக்கு தன் பக்க நியாயங்களை முன் வைக்க  முடியுமாக இருக்கும் எனவும்   ஹாதியாவின் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

எனினும், சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் மன்றில் ஆஜராகிய, அரச சட்டவாதி  மாதினி விக்னேஸ்வரன், பிரதிவாதிகள் கோரிக்கைக்கு அமைய, மொழிபெயர்ப்பு வழங்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்து, தமது ஆட்சேபனையை முன்வைத்துள்ளார்.

எவ்வாறாயினும் அந்த ஆட்சேபனையை நிராகரித்துள்ள  கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி அரசியல் அமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள மொழி உரிமை தொடர்பில் ஆராய்கின்ற போது, பிரதிவாதி புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் , குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் குற்றப்பத்திர இணைப்புகள் காணப்பட்டால் மாத்திரமே நியாயமான வழக்கு விசாரணைகளை முன்னெடுத்து செல்லக் கூடிய சூழலை ஏர்படுத்தும்  என சுட்டிக்காட்டி  தமிழ் மொழி பெயர்ப்புக்களை வழங்க உத்தரவிட்டார்.

இந் நிலையிலேயே வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைத்திவைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30