(எம்.எம் மின்ஹாஜ்)
நான்கு வருடமாகும் வரைக்கும் ஆட்சியை எவராலும் கவிழ்க்க முடியாது.ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசிலிருந்து விலகினால் மாத்திரமே தேசிய அரசாங்கத்தை கவிழ்க்க முடியும். எவ்வாறாயினும் ஆட்சியை கவிழக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது. சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி தனிக்கட்சியினால் ஆட்சி மாற்றத்தை செய்ய முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்,

அத்துடன் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் தொடர்பில் முக்கிய தீர்மானம் எடுப்பதற்கு வெள்ளிக்கிழமை நிதி சபை கூடுகின்றது. இதன்போது இச்சர்ச்சைக்கு உரிய பதில் கிடைக்கும், மேலும் அடுத்த வாரமளவில் கோப் குழுவின் அறிக்கையும் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் . எனவே நிதி சபையின் அறிக்கை கிடைத்தவுடன் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிதி அமைச்சின் கேட்பேர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.