(எம்.மனோசித்ரா)
ஏனைய நாடுகளின் பிரச்சினைகளைக் காண்பித்து அரசாங்கம் அதன் இயலாமையை மறைக்க முற்படுகிறது என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
அத்துடன் ரஷ்ய - உக்ரேன் மோதலால் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கக் கூடும். இதனை காணரமாகக் காண்பித்து அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு முயற்சிக்கும். ஆனால் எரிபொருள் தட்டுப்பாடுக்கு இதனை காரணமாகக் கூற முடியாது.
மேலும் மின்சக்தி அமைச்சரும் வலு சக்தி அமைச்சரும் ஒருவருக்கொருவர் குறை கூறிக் கொண்டிருக்கின்றனர். அமைச்சர்களை அவர்களது பொறுப்புக்களை முறையாக நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அமைச்சர்கள் மாத்திரமின்றி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உள்ளிட்ட நிறுவனங்கள் கூட பொறுப்பின்றியே செயற்படுகின்றன. அந்நிய செலாவணி வீழ்ச்சி , கடன் உள்ளிட்டவற்றின் காரணமாக நாடு பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இந்தியாவிடமிருந்து பெரும் 500 மில்லியன் டொலர் கடனும் நிறைவடைந்த பின்னர் அரசாங்கம் மீண்டும் கடன் தேடிச் செல்லும்.
கொவிட் தொற்றின் காரணமாக அந்நிய செலாவணி இருப்பு வீழ்ச்சியடையவில்லை. மத்திய வங்கி அறிக்கையின் படி அதிக வட்டிக்கு கடன் பெற்றமையே இந்த நிலைமைக்கு காரணமாகும் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM