நெதர்லாந்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சருடன் அமைச்சர் பீரிஸ் சந்திப்பு

24 Feb, 2022 | 05:03 PM
image

(எம்.மனோசித்ரா)

பரிஸில் உள்ள பிரெஞ்சுக் குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற இந்தோ - பசிபிக் ஒத்துழைப்புக்கான அமைச்சர்கள் மட்ட மன்றத்தின் பக்க அமர்வாக, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்  நெதர்லாந்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் வோப்கே ஹோக்ஸ்ட்ரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நெதர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சருடன் அமைச்சர் பீரிஸ் பால் பண்ணையிலான ஒத்துழைப்பு, தோட்டக்கலை, விவசாயம் சார்ந்த தொழில், சுற்றுலா, எராஸ்மஸ் புலமைப்பரிசில்கள் உட்பட உயர்கல்வியிலான முன்முயற்சிகள் மற்றும் முழு அளவிலான கலாச்சார ஒத்துழைப்பு, குறிப்பாக பாரம்பரிய தலங்கள் மற்றும் கலாச்சார கலைப்பொருட்களைப் பாதுகாத்தல் போன்ற தலைப்புக்களில் கலந்துரையாடினார்.

நெதர்லாந்தில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகளாக அவர் ஆற்றிய விரிவுரைகள் மற்றும்  ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அவரது முனைவர் பட்ட ஆய்வறிக்கையின் தலைப்பு, ரோமன்-டச்சு சட்டத்தில் பேராசிரியர் பீரிஸின் அதிகாரபூர்வ அந்தஸ்து குறித்து டச்சு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்  பாராட்டினார்.

எதிர்வரும் காலங்களில் கொழும்புக்கு விஜயம் செய்யுமாறு நெதர்லாந்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கு  இலங்கையின் வெளிநாட்டலுவல்கள்  அமைச்சர் விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புகையிரத திணைக்கள காணிகளை சட்டவிரோதமாக உபயோகிப்போருக்கு...

2022-10-05 16:44:13
news-image

பல்கலைக்கழகங்களில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது -...

2022-10-05 16:45:38
news-image

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக...

2022-10-05 16:52:42
news-image

பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத...

2022-10-05 16:35:06
news-image

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல்...

2022-10-05 16:19:31
news-image

கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு :...

2022-10-05 16:15:06
news-image

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

2022-10-05 16:38:33
news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக...

2022-10-05 16:36:12
news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

சர்வதேச அழுத்தம் மூலம் தமிழர்களுக்கு தேவையானவற்றை...

2022-10-05 15:54:54
news-image

பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்த...

2022-10-05 13:10:41