மரண தண்டனைக்கு எதிரான பிரேமலால் ஜயசேகரவின் மேன் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

Published By: Digital Desk 4

24 Feb, 2022 | 05:10 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

தமக்கு எதிராக இரத்தினபுரி  மேல் நீதிமன்றம் அளித்த மரண தண்டனை தீர்ப்பை ரத்து செய்து, தம்மை  விடுவித்து விடுதலை செய்யுமாறு, ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உட்பட  மூவர்  தாக்கல் செய்துள்ள மேன் முறையீட்டு மனுக்கள் மீதான  தீர்ப்பினை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி  வழங்கப்படவுள்ளது.  

குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள்  வியாழக்கிழமை (24) பந்துல கருணாரத்ன மற்றும் ஆர்.குருசிங்க  ஆகிய மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில்  விசாரணைக்கு எடுக்கப்பட்டு, விசாரணைகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டன. இந் நிலையிலேயே குறித்த மேன் முறையீட்டு மனுக்களின் தீர்ப்பை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி அறிவிப்பதாக நீதிமன்றம்  அறிவித்தது.

முன்னாள்  பிரதியமைச்சரும், இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து பொது ஜன பெரமுன சார்பில்    பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ,  சொகா மல்லி  என அறியப்படும்   பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு   கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி மரண தண்டனை விதித்து  இரத்தினபுரி  மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இரத்தினபுரி  மேல்நீதிமன்ற எல்லைக்குட்பட்ட காவத்தை நகரில்   கடந்த 2015 ஜனவரி மாதம் 5ஆம் திகதி  அல்லது அதனை அண்மித்த ஒரு தினத்தில் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு  ஆதரவளிப்பதற்காக ஏற்பாடு  செய்யப்பட்டிருந்த  கூட்டத்தின்  ஏற்பாடுகளை   அழிப்பது. 

மற்றும்  காயம் ஏற்படுத்தும் நோக்குடன்   சட்டவிரோத  கூட்டமொன்றின் உறுப்பினராக இருந்தமை  , திட்டமிட்டு  நபர் ஒருவரை கொலை செய்தமை, மேலும் இருவரை கொலை செய்ய முயற்சித்தமை உள்ளிட்ட  9 குற்றச்சாட்டுக்களின் கீழ் 7 பிரதிவாதிகளுக்கு எதிராக     சட்டமாதிபரால் கடந்த 2016  செப்டம்பெர் 13ஆம் திகதி   இரத்தினபுரி மேல்நீதிமன்றில்  அப்போதைய  நீதிபதியாக இருந்த யு.எச்.பி. கரலியத்த முன்னிலையில்    குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

இதன் போது  குற்றச்சாட்டுக்களை உறுதி செய்ய சட்டமாதிபரால்   59 பேரின் சாட்சியங்கள் 16  தடயப்பொருட்களும்  நீதிமன்றில்  சமர்ப்பிக்கப்பட்டன. 

அதன் பின்னர்   கடந்த 2017ஆம் ஆண்டு முதல்  நீதிபதி  ரொஹான் ஜயசூரிய முன்னிலையில் இந்த  வழக்கு   விசாரணைக்குட்படுத்தப்பட்டது. இருவருட கால சாட்சி  விசாரணைகளை தொடர்ந்து  குற்றம் சுமத்தப்பட்ட  பிரதிவாதிகளில்  பெலவத்தகே பெதும் தனஞ்சய அல்லது பெலா,  ஊருபெலவுவேகம எதிராலராகே அஜித் மலவி குணவர்த அல்லது மலவி  உடஅதா சீலகே   அசங்க நாமல்  அல்லது   சாஜன்டூ  , உக்கந்தகே   திலங்க பிரதீப் ஆகியோரை பூரணமாக நீதிமன்றம்  விடுவித்தது.  

அதன் பின்னரே   எஞ்சிய  பிரதிவாதிகளான   பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட  மூவருக்கு எதிரான   வழக்கு விசாரணைகள்   தொடர்ந்து இடம்பெற்று  வந்த நிலையில்,     முறைப்பாட்டாளரான   சட்டமாதிபர் தரப்பில்  பிரதிவாதிகளுக்கு எதிரான   குற்றச்சாட்டுக்கள்   சந்தேகத்திற்கிடமின்றி  நிரூபிக்கப்பட்டுள்ளதாக  அறிவித்த  நீதிபதி  அம்மூவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார்.

இந்த தீர்ப்புக்கு எதிராகவே, பிரேமலால் ஜயசேகர  மேன் முறையீட்டு மன்றில்  மேன் முறையீடு செய்துள்ளார். அம்மனுவே தற்போது, விசாரித்து நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மிலேச்சத்தனமான கொலைகளால் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

2025-03-15 18:20:59
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை,...

2025-03-15 17:42:58
news-image

தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை...

2025-03-15 18:55:26
news-image

இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள...

2025-03-15 17:12:06
news-image

"கிளீன் ஸ்ரீலங்கா" வின் கீழ் நுகர்வோர்...

2025-03-15 18:51:00
news-image

வரிச் சலுகைகளை உடன் நடைமுறைப்படுத்துங்கள் ;...

2025-03-15 17:29:19
news-image

பொருளாதாரத்தில் பெண்களின்பங்களிப்புக்கு தடையாக உள்ள காரணிகளை...

2025-03-15 17:35:45
news-image

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு ; 'சமன்கொல்லா'...

2025-03-15 17:34:44
news-image

தேசிய ஒற்றுமைப்பாடு, நல்லிணக்க அலுவலகத்துக்கு நிர்வாகக்...

2025-03-15 17:50:28
news-image

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி....

2025-03-15 18:52:01
news-image

கம்பஹாவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இளைஞன்...

2025-03-15 16:56:03
news-image

21 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன்...

2025-03-15 16:43:26