யாழ். நெல்லியடியில் லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரிக்கு முன்பாக இன்று பிற்பகல் 12.55 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றது.

சம்பவத்தில் துன்னாலை கோவில் சந்தை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.

லொறி ஒன்று வீதியில் பயணித்த வேளை, எதிரே மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன், தனது கட்டுப்பாட்டையிழந்து வீதியின் மறுபக்கத்தில் பயணித்த குறித்த லொறியுடன் மோதி விபத்து ஏற்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.